Subscribe Us

header ads

-கொரோனா- தீர்வு உங்களிடமே தான் உள்ளது. (விபரம் உள்ளே)


2020 மார்ச் 16ம் திகதி. நேரம் காலை 10 மணி. இலங்கையில் தற்பொழுது வரைக்கும் 19 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் ஒருவர் (சீனப்பெண்) குணமாகி சென்றுவிட்டார். இப்போது எக்டிவ் கேஸஸ் 18. இதில் 11 பேர் அங்கோட IDH மருத்துவமனையிலும் 7 பேர் பொலன்னருவை வைத்தியசாலையிலும் அணுமதிக்கப்பட்டுள்ளனர். 

IDHயில் உள்ள ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்கலாக 133 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர். 1500க்கும் அதிகமானவர்கள் Quarantine செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 4405 பேரை தத்தமது வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து பொலிஸின் உதவியுடன் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றன். இதில் 1120 சீனர்களும் உள்ளடங்குவர்.

விசயத்துக்கு வருவோம். இப்பொழுது கொரோனா வைரஸினால் நாள் ஒன்றுக்கு பல உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளும் இதே போன்ற நிலமையில் தான் சில நாட்களுக்கு முன்னர் இருந்தன. ஒரு நாளைக்கு 2,5,7 ஆக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மக்களினதும் அரசினதும் அலட்சிய போக்கால் ஒரு கட்டத்தில் நாளொன்றிற்கு 100,200,1000,3000 ஆக அதிகரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கின்றன. முக்கியமாக அவைகள் எல்லாம் நம்மை விட பல மடங்கு வளங்கள் பொருந்திய நாடுகள்.

மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் மருத்துவ வசதியிலும் பொருளாதாரத்திலும் நாம் ஒரு படி கீழே தான் உள்ளோம். பெரும்பாலும் நமது வைத்தியசாலைகளில் ஒரு கட்டிலில் இரு நோயாளர்கள் வீதமே காணப்படும். இப்படியான ஒரு நாட்டின் சீனாவைப் போன்றோ இத்தாலியைப் போன்றோ கொரோனா தாக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? நீங்கள் நினைக்கிறீர்களா சீனாவைப் போன்று மூன்று நாட்களில் புதிய வைத்தியசாலை கட்டப்பட்டு வைத்தியம் செய்யப்படும் என்று? நிச்சயமாக இல்லை.

So, இதற்கு தீர்வு தான் என்ன? தீர்வு உங்களிடமே தான் உள்ளது. அடிப்படையாக:
1.கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள்

2. கூட்டங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் (Social Distancing)


மேலே சொல்லப்பட்ட இரண்டையும் மனதில் வெய்த்துக் கொள்ளுங்கள். மனைவி குழந்தைகள் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

நம் ஒருவரின் அலட்சியப் போக்கு பலரின் உயிர்களுக்கு ஆபத்தாக அமையலாம். நாம் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் நமது பிள்ளைகள் மனைவி பெற்றோர் சகோதரர்கள் நண்பர்கள் என்று பலர் நோயாளியாகுவார்கள். 

உயிரிழக்க நேரிடலாம். சிலர் கோமா நிலைக்கு சொல்லலாம். தன்னை ஒரு ஆரோக்கியமானவராக உங்களை நீங்கள் கருதலாம். ஆனால் உங்களினூடாக பரவப் போகும் அந்த வைரசின் வீரியத்தை வயது முதிர்ந்த உங்கள் பெற்றோர்களால் ஈடுகொடுக்க முடியாது. அரசாங்கம், சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவிப்புகளுக்கு கட்டுப்படுங்கள். ஒத்துழைப்பு வழங்குங்கள். அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். 

கூட்டம் கூடும் இடங்களில் நிற்காதீர்கள். ரெஸ்டுரண்டுகள் மோல்களுக்கு செல்வதை நிறுத்துங்கள். 

பயணங்களை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். இருமல் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். 

ஒவ்வொரு தனி மனிதனின் சுகாதாரத்தில் தான் இந்நோய்க்கான மருந்து உள்ளது!!!

Lets Fight Together Against #Coronavirus!!! #covid19 Sri Lanka!!!

Post a Comment

0 Comments