29 வயதான இளைஞன், வெளிநாட்டில் வேலை செய்த பெண் ஒருவருடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். சில வருடங்கள் தொடர்ந்த காதலின் பின்னர் இலங்கைக்கு வந்த பெண் குறித்த இளைஞனை திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்த கணவருக்கு அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்துள்ளது.
அதற்கமைய குறித்த பெண்ணுக்கு திருமண வயதில் மகள் ஒருவரும் 12 வயதுடைய மகன் ஒருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் ஆராய்ந்த கணவனுக்கு, பின்னரே மனைவியின் உண்மையாக வயது 42 என தெரியவந்துள்ளது.
இத்தனை வருடங்கள் தன்னை ஏமாற்றிய மனைவி தொடர்பில் மனவருத்தமடைந்த கணவன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் தனது விவாகரத்து வழங்குமாறும் கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments