Subscribe Us

header ads

கத்தார் OOREDOO வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!


கத்தாரின் தொலைத் தொடர்பு நிறுவனமான OOREDOO தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது புதிய வகையில் ஊழல் பேர்வழிகளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் VoIP சேவையைப் பயன்படுத்தி OOREDOO நிறுவனத்தில் இருந்து வருவது போன்று அழைப்பு எடுத்து வாடிக்கையாளர்களுடன் பேசி திருட்டுவேலைகளில் ஈடுபடுவதாக OOREDOO நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சாதாரணமாக நாம் ஒருவருக்கு எடுக்கும் அழைப்பு போன்று தான் இந்த அழைப்புக்கள் ஓரிடோ வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன. இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அழைப்பாளர்களின் ஆசை வார்த்தைகள், பரிசுகள் போன்றவற்றுக்காக தங்களது பணங்களை கொடுத்து, தங்களது கிரடிட் அட்டைகளை இலக்கங்களை வழங்கி ஏமாந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இது போன்ற பரிசுகள், ஆசைவார்த்தகளை நம்பி யாரும் ஏமாந்து பணத்தையோ அல்லது தங்களது வங்கி அட்டை இலக்கங்களையோ வழங்கிட வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களில் யாராவது இது போன்ற அழைப்புக்களை பெற்றுக் கொண்டால் உடனே பின்வருமாறு முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  • முறைப்பாட்டு இலக்கம் - 111, 
  • ஈமெயில் - FraudControl@ooredoo.qa or CustomerService@ooredoo.qa 
  • அல்லது Ooredoo சேவை மையன் ஒன்றை நாடுங்கள்

Post a Comment

0 Comments