கல்பிட்டி ரஹ்மானியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு G.C.E O/L பரீட்சை எழுதிய 11 மாணவர்களில் 09 மாணவர்கள் சித்தி பெற்று உயர்தர கல்வியை தொடர தகுதி பெற்றுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் வழங்கிய அறிவை மார்க்க கல்வியை நிறைவாக கற்க உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் அரபுக் கல்லூரியில் நுழைந்த இம்மாணவர்களுக்கு கல்லூரியின் கடினமான பாடத்திட்டத்திற்கு மத்தியில் பாடசாலைக் கல்வி பகுதி நேரத்திலேயே நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
எந்த வித வெளிவாரியான பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லாமல் இவ்வாறு சித்தியெய்திய மாணவர்களுக்கும் அவர்களை உருவாக்கிய கல்லூரிக்கும் அல்லாஹ் மென் மேலும் பறகத் செய்வானாக.
பாடசாலை கல்வி கற்க தகுதி(திறமை) இல்லாதவர்களே மத்தரசாக்களில் விடப்படுகிறார்கள் என்ற தப்பான கருத்தை தவிடுபொடியாக்கியுள்ளதோடு, இனி வரும் காலங்களில் பட்டதாரி மெளலவிமார்கள் உருவாகுவதற்கான அடித்தளமாக கல்பிட்டியில் அமைவதற்கு இம்மாணவர்களின் இச்சாதனை முன்னுதாரணமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments