"போராட்டமே இல்லாமலே பொதுவாக எல்லோர்க்கும் கிடைக்காது நீதி"..
உண்மையை உரைக்கும் அழகான பாடல் வரிகள்...போராட்டம் என்பது ஒன்றும் அசிங்கமான ,தீண்டத்தகாத விசயமல்ல..
கருவறையிலிருந்து வெளியே வருவதற்குப் போராடுவது முதல்,கதைக்க முடியாமல் பால் தரும்வரை அழுது போராடும் குழந்தை முதல் , கற்பதற்குப் போராட்டம், தொழிலுக்குப் போராட்டம், நோய்களிலிருந்து மீளப் போராட்டம் என தனி மனித வாழ்க்கையிலேயே பல போராட்டங்கள்...
ஒரு நாடு என்று எடுக்கும் போது பல விதங்களில் போராட்டங்கள் எழுவது சகஜம் தான்.. முன்பெல்லாம் இப்படியான வாழ்வதற்கான போராட்டங்களை கேள்விப்படுகையில் அந்த மக்களை எண்ணி மிகவும் கவலையாக இருக்கும்..
ஆனால் இன்று நம் ஊரிலேயே நாம் அதை அனுபவிக்கும் கொடுமை எமக்கு.. அன்று அனல்மின்சாரம் வந்தபோதும் பல போராட்டங்களும் உயிரிழப்புகளும் நடந்தது உண்மை..
சமூக வலைத்தளங்கள் அன்று குறைவு என்பதால் பிரச்சினையின் உக்கிரம் அன்று முழுமையாகப் புரியவில்லை.. புத்தள மக்களின் கூக்குரல் ஏன் இன்னும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்லாது, முகப்புத்தகத்தில் உள்ள ஒரு சிலர் தவிர்ந்த நிறைய பிரபலங்களின் காதுகளை எட்டவில்லை எனப் புரியவில்லை..
நான் ஒன்றும் பிரபலமல்ல.. நான் இடும் பதிவு நான்கு பேரைச் சேரலாம்... ஆனால் இங்குள்ள பிரபலங்கள் "புத்தள மக்களின் வாழ்வதற்கான போராட்டம்" பற்றி ஒரு பதிவு போட்டாலே ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடையும். நம் அரசு ஆட்சிக்கு வந்ததே சமூகவலைத்தளங்களின் அட்டகாசமான ஆதரவு மூலம் தான் என்பது பச்சைக் குழந்தைக்கும் புரியும்..
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலங்களால் இது மக்களிடையே பரப்பப்படும் போது நிச்சயமாக அது அரசின் காதுகளை மீண்டும் எட்டும்...
முகநூல் போராட்டம் வலுப் பெறட்டும்..புத்தள மண் புத்துயிர் பெறட்டும்..போராடுவோம்.
Maheesha Edward
0 Comments