ராஸிக் பரீத் Sir அவர்களும் தனது பாட்டனார் வாப்பிச்சி மரிக்கார்(கல்பிட்டி) அவர்களும் வாப்பிச்சி மரிக்கார்??
இலங்கை தேசிய அருங்காட்சியகமும் வாப்பிச்சிமரிக்காரும் (History of National museum of Sri lanka)
1872ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் 14வது ஆளுநர் சேர் வில்லியம் கிரகெரி (Sir William Henry Gregory) அவர்களிடம் இருந்து அவசர அழைப்புக் கிடைத்தது. இலங்கையின் புகழ்பெற்ற கட்டிட நிர்மாணத்துறை நிபுணர் வாப்பிச்சி மரைக்கார் அவர்கள் உடனடியாக ஆளுநரை சந்திக்கச் செல்கிறார். 'மரிக்கார் இலங்கையில் உங்களைப் போன்ற சிறந்த கட்டடக் கலை நிபுணரை இதுவரை எங்களால் காணமுடியவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணியை ஒப்படைக்கலாம் என்று தான் உங்களை அழைத்துவரச் சொன்னேன்' என்றார் ஆளுநர்.
இலங்கையின் தேசிய அருங்காட்சியகத்தை நிர்மானிக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு என்னாலான சகல ஒத்துழைப்புக்களும் உங்களுக்கு கிடைக்கும் என்றார். வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகள் வேகமாக இடம்பெற்றன. நிர்மாணப் பணிகள் அனைத்தும் நேர்த்தியான முறையில் பூர்தியடைந்ததன. 1877ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் விழா விமர்சையாக இடம்பெற்றது. ஆளுநர் வில்லியம் கிரகெரி அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி நிர்மாணத்திற்கு பொறுப்பாக இருந்த வாப்பிச்சி மரிக்கார் அவர்களையும் தச்சுத்துறைக்கு பொறுப்பாக இருந்த பெரேராவையும் அழைத்து 'உங்களுக்கு விருப்பமானதைக் கேளுங்கள் நான் தரத்தயாராக இருக்கிறேன் என்றார். உடனே S. M பெரேரா தனக்கு ஒரு கௌரவ நாமத்தை வழங்குமாறு கேட்டிருந்தார். ஆளுநர் அவருக்கான கௌரவ விருதை வழங்கினார்.
ஆனால் வாப்பிச்சி மரிக்காருக்கு பிரித்தானி மகாராணியாரால் வழங்கப்படும் உயரிய சிவில் விருதான "Sir” "knighthood" ஐ வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஆளுநர் கிரகரி அவர்களுக்கு இருந்தது. வாப்பிச்சி மரிக்கார் அவர்களோ ஆளுநரை பார்த்து 'நான் கேட்டால் தருவீர்களா' என்று கேட்டார். 'கண்டிப்பாக' என்றார் ஆளுநர். 'நான் உங்களிடம் கேட்கும் சன்மானம் ஒன்று தான், இந்த அருங்காட்சியகத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் மூடிவிட வேண்டும்' இவர் கௌரவ விருதை கேட்பார் என்றல்லவா நினைத்திருந்தேன் ஏன் சன்மானமாக வெள்ளிக்கிழமை நாட்களில் அருங்காட்சியகத்தை மூடிவிட வேண்டும் என்கிறார் என்று கேட்டுவிட்டார். 'ஆளுனர் அவர்களே இந்த அருங்காட்சியத்தை நான் கட்டிமுடித்துவிட்டேன். இதனைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். வெள்ளிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு புனிதமான தினம். அவர்கள் அனைவரும் கூட்டுத்தொழுகைக்கான பள்ளிவாசலுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் ஒரு முஸ்லிமாவது வெள்ளிக்கிழமை நாட்களில் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வந்தால் இதனை கட்டியவன் என்ற ரீதியில் நானும் இறைவனிடம் பாவியாக மாறிவிடுவேன்' என்றார் வாப்பிச்சி மரைக்கார். இதைக் கேட்ட ஆளுநர் சார் வில்லியம் கிரகெரி அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வாப்பிச்சி மரைக்காரின் கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்டார்கள். 2010ம் ஆண்டின் பிற்பகுதி வரை இலங்கையின் தேசிய அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்தது. வாப்பிச்சி மரிக்கார் என்ற தனி ஆளுமை போன்று பலர் எமது கடந்த கால அரசியல் தலைவர்கள் சமூக உரிமைகளை வென்றெடுத்தார்கள். இவர்களே எங்கள் தேசிய தலைவர்கள். இவரது பேரன்தான் சேர் ராஸிக் பரீத் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments