கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டிக்கு வருகை தந்த வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன பண்ரா அவர்களினால் கல்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு,கல்பிட்டி பொது நூலகத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது அதேபோல கல்பிட்டி மண்டலக்குடா கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கலும் நாட்டப்பட்டது ,கல்பிட்டி துறையடி காபட் வீதியும் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது இந்நிகழ்வில் முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் N.T.M.தாஹிர் அவர்கள்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரியாஸ் அவர்கள்,கல்பிட்டி பிரதேச செயலக செயலாளர்,கல்பிட்டி பிரதேச சபை செயலாளர்,கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments