Subscribe Us

header ads

கல்பிட்டி பிரதேச ஆட்டோ சங்கங்களுக்கான முக்கிய அறிவித்தல்.


கல்பிட்டி பிரதேச சபையில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களின் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து ஆட்டோ சங்ககளையும் கல்பிட்டி பிரதேச சபையின் கீழ் பதிவு செய்து சங்கங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்,தரிப்பிடங்கள் பிரதேச சபை நிதியின் மூலம் அழகான முறையில் அமைத்தல் போன்ற இன்னும் பல நன்மைகளை சங்கங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடே இந்த இந்த பதிவு திட்டம் என வருகை தந்திருந்த சங்க நிர்வாக உருப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது,

மேலும் சங்கங்களை பதிவு செய்வதற்கான காலகெடு எதிர் வரும் ஏப்ரல் மாதம் 02 திகதி (02-04-2019) வரை வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு முன்னதாக கல்பிட்டி பிரதேச சபையில் விண்ணப்பப்படிவங்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தவரும் பட்சத்தில் பிரதேச சபை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்ப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது,கல்பிட்டி பிரதேசத்தில் சுமார் நாற்பதுக்கும் அதிகமான சங்கங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு; கல்பிட்டி பிரதேச செயலகத்தில் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டியது என்பது அவசியம் இல்லை புதிய சங்கங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த முக்கியமான செய்தி கல்பிட்டி பிரதேச ஆட்டோ சங்கங்கங்களுக்கு சென்றடைய செய்யவும் அதேபோல இப்பதிவை Share செய்வதன் மூலமும் இந்த விடயம் சங்கங்களுக்கு சென்ற உதவவும்.

-Rizvi Hussain-



Post a Comment

0 Comments