புத்தளம் பிரதேசம் எங்கும் எம் எதிர்கால சுகதேகியான வாழ்க்கைக்கு சவால் விடும் வகையில் புத்தள பிரதேசமான அருவக்காட்டில் எதிர் வரும் மார்ச் மாதம் 15 திகதி கொட்டப்படவிருக்கும் சர்வதேச குப்பைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் கல்பிட்டி நகரிலும் வெகு ஆக்ரோஷமாக நடைபெற்றது.
கடந்த 15 ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கல்பிட்டி பெரிய பள்ளியிருந்து பேரணி கோசங்களை எழுப்பிய வண்ணம் அல்-அக்ஸா சந்தியை அடைந்து அதேபோல ஆபத்தொழி ஜூம்ஆ பள்ளியிலிருந்தும் ஆர்பாட்ட பேரணி அல் அக்ஸா சந்தியை வந்தடைந்தது அதேபோல கல்பிட்டி சிலோன் தவ்ஹீத் ஜமாத் பள்ளியிலிருந்து வந்த குழுவினரும் அல் அக்ஸா சந்தியை வந்தடைந்தனர்.
மூன்று ஆர்ப்பாட்ட குழுவினரும் ஒன்றிணைந்து கல்பிட்டி பிரதேச செயலகத்தை நோக்கி கோஷங்களை எழுப்பிய வண்ணம் சென்று பிரதேச உதவி செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இந்த பேரணியில் சர்வமத தலைவர்கள் ,கல்பிட்டி பெரிய பள்ளி தலைவர் ஷாஜஹான் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்கள்,கல்பிட்டி ACMC நகர அமைப்பாளர் A.R.M.முஸம்மில்,கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் PMM.பாஹிம் அவர்கள் ஊர் நலன் விரும்பிகள் இளைஞர்கள் உணர்வுள்ள சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்,பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட கல்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளி இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi hussain-
0 Comments