கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் முயற்சியினால் கல்பிட்டி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்காக விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அதிகாரிகள் முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
அதேபோல கல்பிட்டி புதுக்குடியிருப்பில் அந் நூர் இளைஞர் கழக பராமரிப்பில் காணப்படும் காணிப்பகுதியில் பொது நூலகம் அமைப்பதற்காக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதால் அதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர் எதிர் வரும் நாட்களில் நடைபெறவுள்ள அந்நூர் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments