கல்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் 2018ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை இரண்டு மாணவர்களுக்கும் அதேபோல 70 மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா நேற்று தில்லையூர் அ.மு.வித்தியாலயத்தில் அதிபர் X பாத்திமா றிஸ்வானா (ரெஜினா) அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி தீப்தி பெர்னான்டோ,ஓய்வு பெற்ற முன்னால் கல்விப் பணிப்பாளர் S.நூஹு லெப்பை,முன்னால் தில்லையூர் பாடசாலை அதிபர் சுஹைப்(நவ்சாத்)R.C.பாடசாலை அதிபர் சஹீலா,முகத்துவாரம் மு.வித்தியாலய அதிபர் ஹரமைன்,கோட்டக் கல்வி காரியாலய அதிகாரி S.இஸ்பா மற்றும் ஆங்கில ஆசிரியர் ஆலோசகர் இஸ்பான்,முன்னால் பாடசாலை அதிபர் ஜுனைதீன் அவர்களின் பாரியார்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் A.R.M.முஸம்மில் உறுப்பினர்கள்,பெற்றார்கள்,மாணவர்கள்,ஊர் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவிழ் சாதனை பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள்,கேடயங்கள்,பதக்கங்கள் அணிவித்து பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் வெட்டுப் புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டது.
அத்தோடு இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்குமுகமாக ஆசிரியர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு முன்னால் அதிபர் நவ்சாத் மற்றும் அதிபர் ஜுனைதீன் ஆகியோருக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது.அத்தோடு இவ் வருடம் அகில இலங்கை மட்டத்தில் தமிழ் தினப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட தரம் நான்கில் கல்வி கற்கும் செய்னம்ப் சரா என்ற மாணவிக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டன.
-Rizvi Hussain-
0 Comments