Subscribe Us

header ads

நாளை 14 சைக்கிள் பந்தயத்திற்காக டுபாயில் பல சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்!


துபையில் எதிர்வரும் (டிச. 14) வெள்ளியன்று சைக்கிள் பந்தயத்திற்காக பல சாலைகள் தற்காலிகமாக மூடல்

துபையில் எதிர்வரும் டிசம்பர் 14 வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுமார் 2,000 சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்து கொள்ளும் சைக்கிள் ஓட்டப் போட்டிகளை நடைபெறவுள்ளன. இந்த சைக்கிள் பந்தயங்களுக்காக பல்வேறு சாலைகளின் போக்குவரத்துக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

இந்த பந்தயங்கள் 2 கட்டங்களாக 53 மற்றும் 92 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்படுகின்றன. பந்தயம் நிறைவுற்றபின் மீண்டும் இச்சாலைகளில் போக்குவரத்து துவங்கும்.

இந்த பந்தயங்கள் 'துபை ஆட்டோடிரோமில்' துவங்கி 'துபை மோட்டார் சிட்டி, துபை ஸ்போர்ட்ஸ் சிட்டி, அல் ஹைல் ரோடு, அல் ஹெஸ்ஸா ரோடு, அல் ரெம்ராம் வழியாக பயணித்து மீண்டும் துபை ஆட்டோடிராமிலேயே நிறைவுறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டப் பந்தயம் நடைபெறும் நேரத்தில் ஜூமைரா லேக் டவர்ஸ், ஜூமைரா விலலேஜ் சர்க்கிள், துபை மோட்டார் சிட்டி, துபை ஸ்போர்ட்ஸ் சிட்டி, கிரீன் கம்யூனிட்டி, ரெம்ராம், அரேபியன் ரேஞ்சஸ்-2, தி வில்லா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை ஏற்படும்.

எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டுள்ளன, பந்தயத்திற்குப் பின் எங்கெங்கு மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளன என்பதை அறிய கீழ்க்காணும் சுட்டிகளுக்குள் சென்று அறிந்து கொள்ளவும்.

The #SpinneysDubai92 Cycle Challenge is taking place on Friday 14th December from 6am to 10am. To ensure minimal disruption to your day please check the road closure timings for your area below, as well as here for more information: https://t.co/IpIa9VJ8L4pic.twitter.com/W0PJjsV9OO 

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments