Subscribe Us

header ads

அபுதாபி போலீஸ் படையில் ஒட்டகப் போலீஸ் பிரிவு இணைப்பு!



ஓட்டகங்கள் அரபு பாலைவன மக்களின் பாரம்பரிய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை என்றாலும் நவீன உலகில்  அவற்றின் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு போயுள்ளன.

அரபுலக மற்றும் அமீரக காலச்சார சின்னங்களின் ஒன்றாக விளங்கும் ஒட்டகத்தை சங்கைப்படுத்தவும் (Camels play an important role in Emirati culture and heritage), வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத பகுதிகளுக்கு போலீஸார்கள் எளிதாக செல்லவும் ஏற்ற வகையில் அபுதாபி போலீஸ் படையில் ஒட்டக போலீஸ் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதுகில் ஒற்றைத் திமில் உள்ள ஓட்டகங்களே 'பாலைவனக் கப்பல்கள்' (Ships of the desert) என அழைக்கப்படுகின்றன (The one-humped camels in the Arabian desert are called dromedary camels). இந்த ஓட்டகங்களே பிதோயின்கள் (Bedouins) எனப்படும் கிராமப்புற அரேபியர்களின் போக்குவரத்து வாகனமாகவும், இறைச்சி மற்றும் பால் உணவாகவும், குளிருக்கேற்ற கம்பளியாகவும் விளங்கி வந்துள்ளது.



ஒரு காலத்தில் ஒட்டகங்களை அதிகம் வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பெரிய மனிதர்களாகவும் செல்வந்தர்களாகவும் மதிக்கப்பட்டனர். இன்னும் ஒட்டகங்கள் பண்டமாற்று பணமாகவும் மதிக்கப்பட்டதுடன் ஓட்டக ஓட்டப்போட்டி மற்றும் ஒட்டகங்களுக்கான அழகு போட்டிகளிலும் பரிசுகளை வென்று வருபவையாகவும் இன்றும் விளங்குகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments