அமீரகத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க அரசு மற்றும் Facebook இணைந்து தேடும் திட்டம்
அமீரகத்தில் குழந்தைகள் எவரேனும் காணாமல் போனால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க அமீரக உள்துறை அமைச்சகமும் பேஸ்புக் நிறுவனமும் (Facebook) இணைந்து ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளன, இத்திட்டத்திற்கு “Neda'a” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் எவரேனும் தவறிப் போனால் அதைப்பற்றிய புகாரை அதிகாரபூர்வமாக காவல் நிலையத்தில் தெரிவித்தால் மட்டுமே இத்திட்டத்தின் வழியாக குழந்தைகள் தேடப்படுவர். காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் குழந்தை காணாமல் போன பகுதியிலுள்ள அனைத்து பேஸ்புக் (முகநூல்) உபயோகிப்பாளர்களுக்கும் அக்குழந்தையின் போட்டோ மற்றும் இதர விபரங்களுடன் ஒரு எச்சரிக்கை செய்தி (Alert Message) செல்லும்.
மேற்படி எச்சரிக்கை செய்திக்கு சரியான பதில் கிடைக்காவிடில் அதே எச்சரிக்கை செய்தி நாடு முழுவதுமுள்ள பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கும் செல்லத் துவங்கும். குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட உடன் அந்த எச்சரிக்கை செய்து பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments