1949 ஆம் ஆண்டு இன்டியானா மருத்துவமனை ஒன்றில் ஜெனீவீவே பூரின்டன் என்ற பெண்மணிக்கு பெண் குழந்தையொன்று முறைதவறிய உறவால் பிறந்தது. அந்த குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவமனை சொல்லியதுடன் இறந்த குழந்தையையும் கடைசி வரை கண்ணில் காட்டவேயில்லை.
1940 மற்றும் 1950களில் அமெரிக்காவின் சில மருத்துவமனைகள் முறைதவறிய உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை யாருக்காவது தத்து கொடுத்துவிட்டு பொய் சொல்வது சர்வ சாதாரண நிகழ்வாக இருந்துள்ளது.
ஒரு அனாதை ஆசிரமம் வழியாக ஒரு கலிபோர்னியா குடும்பத்திற்கு தத்துக் கொடுக்கப்பட்டு கோனி மால்ட்ரோப் (Connie Moultroup) என்ற பெயரில் வளர்ந்தார் அந்தப் பெண் குழந்தை பின்பு வெர்மோன்ட் (Vermont) என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தனர் என்றாலும் கோனி மால்ட்ரோப்பை தத்தெடுத்த தாயும் அவரது 5வது வயதில் மரணமடைந்தார்.
அவரது இளம் பருவத்திலேயே தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்தே வளர்ந்துள்ளார் மேலும் தனது உண்மையான தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் ஒரு லட்சியமாகவே வைத்திருந்துள்ளார். இவ்வாறாக தாய் சுமார் 88 வயதையும் மகள் 69 வயதையும் அடைந்துவிட்டனர், 70 ஆண்டுகளும் இடையில் கடந்து போயிருந்தன.
கோனி மோல்ட்ரோப்பின் மகள் சேஸ் (Chase) தனது தாய் தன்னை பெற்றவளை தேடி வருவதை அறிந்திருந்தவர் அவரது பிறந்த நாளிற்கு முன்னோர்களின் மரபணுவை கண்டுபிடிக்க உதவும் Ancestry DNA testing kit ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த கிட் மூலம் கோனியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர் கண்டுபிடிக்கப்பட, அவர் மூலம் கோனியை பெற்றெடுத்த தாயை கண்டறிந்துள்ளார்கள்.
புளோரிடா, டம்பாவிலுள்ள (Florida, Tampa) ஒரு முதியோர் இல்லத்தில் ஜெனீவீவே பூரின்டனும் கோனி மால்ட்ரோப்பும் அதாவது 70 ஆண்டுகளுக்குப் பின் நேரில் தாயும் சேயும் சந்தித்துக் கொள்ள, ஆனந்தக் கண்ணீர் பெருக முடிவு சுபமானது.
Sources: kutv.com, Emirates 247, globalnews.ca & femalefirst.co.uk etc....
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments