துபையில் அரசு ஊழியர்கள் 13 வகையான விடுமுறைகளுக்கு 2019 ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம்
துபை அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கீழ்க்காணும் பட்டியலில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஊழியர் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பம் வழங்கிய 10 நாட்களுக்குள் அதுகுறித்து முடிவெடுத்து அறிவித்திருக்க வேண்டும், முடிவெடுக்காமல் 10 நாட்களை கடந்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும்.
விடுமுறை இனங்களின் பட்டியல்:
1. ஆண்டு விடுமுறை - Annual leave
2. உடல்நிலை சுகமில்லாததற்கான விடுப்பு - Sick leave
3. மகப்பேறு விடுப்பு - Maternity leave
4. குழந்தைகளுக்காக எடுக்கும் விடுப்பு - Paternity leave
5. துக்க விடுப்பு - Mourning leave
6. மரணம் மற்றும் அது தொடர்புடைய விடுப்புக்கள் - Leave for death-related events
7. ஹஜ் செல்ல விடுமுறை - Haj vacation
8. நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கான விடுப்பு - Participation in events
9. நோயாளிகளுக்கு துணையாக செல்வதற்கான விடுப்பு - Accompanying sick leave
10. துணைவருக்கு உதவுவதற்கான விடுப்பு - Leave for partner,
11. படிப்பதற்கான விடுப்பு - Study leave
12. சம்பளமில்லா விடுப்பு -Leave without pay
13. தேசிய சேவை மற்றும் இருப்பிலுள்ள விடுப்புக்கள் - Leave without pay
இதுபோல் துபை அரசு ஊழியர்களின் வருடாந்திர விடுமுறை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிரேடு 12 மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்கள் 30 நாட்களும், கிரேடு 4 முதல் 11 வரையுள்ள ஊழியர்கள் 25 நாட்களும், கிரேடு 3 மற்றும் அதற்கு கீழுள்ள ஊழியர்கள் 18 நாட்களும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments