கோலாலம்பூர் அருகே இருக்கும் புத்ராஜெயாவில் மலேசியா பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புவீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கால் எந்தவிதமான தொந்தரவும், பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். மலேசியா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கிறார் ஜாகீர் நாயக். ஆதலால், இந்தியாவுக்கு ஜாகீர் நாயக்கை திருப்பி அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தார்.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சால் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு தூண்டப்பட்டனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிபதி மன்மோகன் சிங் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments