உன் விபச்சார கண்களுக்கு விலைமதிப்பற்ற என் உடல் தெரியவில்லை என்பதற்க்காகவா எதிர்க்கின்றாய் ஹிஜாபை?.....!!!!
என் மார்பங்களின் அச்சகங்கள் உன் காமத்திற்கு இறையாகவில்லையே என்ற ஏக்கதிலா எதிர்க்கின்றாய் என் ஆடை சுதந்திரத்தை??....!!!
கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?
நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?....!!!
மேலும் இல்லை கீழும் இல்லை நடுவில் கொஞ்சம் ஆடை நான் அணிய வேண்டும் நீ பார்வையிலே என்னை கொஞ்சம் வேண்டும் உன் ஆசை நிராசை ஆனதாலோ ?என் ஹிஜாப் மீது வெறுப்பு உனக்கு ...!!
பெண் விடுதலை என்ற பெயரில் பிதற்றிக்கொண்டு...
அரைகுறை ஆடை அணிவதல்ல உண்மை பெண்ணியம்...!
போதைப்பொருளாக்கி பார்ப்பதே நீ திணிக்கும் பெண்ணியமா...?
ஹிஜாபை அணிய வேண்டாமென சொல்ல உனக்கென்ன உரிமை..., நீ யார்? ....!!!
என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?...!!
மெல்லிய ஆடையில் தெள்ளத் தெளிந்த மார்பகங் தெரிந்தால்தான் நாகரிகம் சுதந்திரம் என்றால் மனிதனை விட நாயே அதிகம் சுதந்திரத்தை சுவாசிக்கிறது நீ நாயா? மனிதனா??
நான் மனிதன் ஹிஜாபே என் ஆடை.....!!!
வெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...
என் அறிவுக்கான வெற்றியென நினைத்து ஏமாற்றிகொள்வேன் என்று மட்டும் நினைத்து விடாதே,ஹிஜாபே என் ஆடை....!
நீ விரும்புவதை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
நான் விரும்பும் ஹிஜாபே எனக்கான பாதுகாப்பு அரண்...!
என்னை பாதுகாக்கும் கேடையம்
நீ கூக்குரலிடுவது போல் என் ஆடை சிறுமைப்படுத்தவில்லை,
மாறாக என்னை பூரணமாக முழுமையாக்கியது...!
என்னை ் பார்க்கும் உரிமை எனக்கு மஹர் தந்தவனுக்கே இன்றி கண்ட தெரு நாய்களுக்கு அல்ல
என் ஹிஜாப் என் உரிமை...!!!
அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
ஆம்... அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
ஹிஜாப் என் ஆடை என் ஆயுதம் மூச்சு உள்ளவரையில் போராடுவேன் போர் தொடுப்பேன்...!!!
உங்கள் நண்பன் தமீம்
0 Comments