Subscribe Us

header ads

குருதிப்புற்று நோய் தாக்கத்தின் ஊடாக போராடும் சிறுமி - உதவி செய்ய முன் வாரீர்

றகுமானியா சர்வேதய வீதியில் வசிக்கும் பாத்திமா சயானா எனும் இச்சிறுமி பிறந்து 2வயது பூர்த்தி அடைந்ததில் இருந்து இன்று வரை (7வயது வரை ) குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாதம் ஒரு முறை மஹரகம வைத்தியசாலைக்கு சென்று வருகின்றார்.
 
இதற்கான போக்குவரத்து மற்றும் மருத்துவ சிலவாக தலா 10000/.ரூபா தேவைப்படுகின்றது.

ஆனால் இவர்களின் குடும்ப சூழ்நிலையோ இதற்க்கு தடையாக இருப்பதாலும் தந்தை ஒரு ஹோட்டலில் கூலித்தொழில் செய்வதாலும் குடியிருப்பதுக்கு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பதாலும் இச்சிறுமியின் மருத்துவத்துக்கு போதிய வருமாணம் இல்லாது தாய்தந்தையர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.


இச்சிறுமியின் தாய் சில தனவந்தர்கள்,மற்றும் முகநூல் உறவுகள் உதவிகளை நாடிச்சென்று இதுவரை காலமும் மகளின் மருத்துவத்தை செய்து வந்துள்ளார் என்று தெரியக்கிடைத்தது #அல்ஹம்துலில்லாஹ்

தொடர்சியாக மாதா மாதம் செய்துவரும் சிகிச்சையின் அடிப்படையில் இம்மாதம் எவ்வித உதவியும் கிடைக்காது தனது மகளோடு வேதனைப்பட்டு செல்லும்போது அறிந்துகொண்டேன் .

இப் புனித மாதத்தில் இச்சிறுமியின் மருத்துவ தேவைக்காக உங்களால் முடியுமான உதவிகளை வழங்கிடுங்கள் இறைவன் போதுமானவன்

உயிர் வாழ போராடிக்கொண்டு இருக்கும் இச்சிறுமிக்கு இறைவன் உதவி என்றும் கிடைக்க வேண்டியவனாக இப்பதிவை இடுகின்றேன்


தோழர்களே முடியுமானவர்கள் இப்பதிவை #share செய்து இச்சிறுமியின் மருத்துவ தேவைக்கு உதவ முன்வாருங்கள்

Jamaldeen nafeela
சர்வேதய வீதி 
ஏறாவூர் 02C


A.numbar. 254200150083817
மக்கள் வங்கி


மேலதிக தகவல்களுக்கு என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 

Rifay Mohamed





Post a Comment

0 Comments