Subscribe Us

header ads

கல்பிட்டி ஜனசவிபுரயில் விளையாட்டு மைதானத்தை மீட்டு கொடுத்த கல்பிட்டி பிரதேச சபை தலைவர்



கல்பிட்டி ஜனசவிபுரயில் 20 வருடங்களாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த சுமார் மூன்று ஏக்கர் காணி பகுதி முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் முயற்சியினால் தனியார் உல்லாச விடுதி அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டதுள்ளது இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் பொது மக்கள் ,மக்கள் எதிர்ப்பை தடுப்பதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு கம்பி வேலிகள் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உடனடியாக கல்பிட்டி பிரேத சபை உறுப்பினர் J.M.தாரிக் அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது,தாரிக் அவர்கள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார் அங்கே கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் U.M.M.அக்மல் அவர்களும் மக்களுடன் இணைந்து தனது எதிர்பையும் தெரிவித்துக் கொண்டு இருந்துள்ளார்,

உடனடியாக தாரிக் அவர்கள் இது பொது மக்களுக்கு செய்யும் துரோகம் இதில் கம்பி வேலி அமைக்க விட மாட்டோம் என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்,அதற்கு கல்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்கள்
தனக்கு சட்டபூவமான ஆவணங்கள் சமர்ப்பித்துளளதினாலே தான் பாதுகாப்பு வழங்குவதாகவும் ஆகவே பிரதேச சபை தலைவரும் ,உறுப்பினர்களும் அமைதியாக கலந்து செல்லுமாறும் இல்லை என்றால் உங்களுக்கு எதிராக சட்டம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்,அதற்கு பிரதேச சபை தலைவர் அவர்கள் இது எமது பிரதேச சபைக்கு கட்டுப்பட்ட இடம் இங்கு வேலியே,மதிலோ ,கட்டிடங்கலோ கட்டுவது என்றால் எமது அனுமதி பெற வேண்டும்,இதற்கு எங்களிடம் அனுமதி பெறவில்லை அவ்வாறு அனுமதி பெறாத இவ்வேளையை தொடர்ந்தால் உங்களுக்கும் தனியார் உரிமையாளர் அவர்களுக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அதிகாரன தோரனையில் கூறியுள்ளார்,

அதன் பின்னர் அவ்விடத்தை விட்டு கம்பி வேலி அமைக்காமல் அணைவரும் அகன்று சென்று உள்ளனர்,

இருந்தாலும் சட்டபூர்வமாக தனியார் நிறுவன உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதால் முதலில் அக்காணி பகுதியை பிரதேச சபைக்கு உள்வாங்குவதோடு உத்தியோகபூர்வமாக பொது மக்களுக்கு மைதானமாக வழங்குவதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளை,கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள்,J.M.தாரிக் அவர்கள்,U.M.M.அக்மல் அவர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments