Subscribe Us

கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க நிர்வாக குழு வெற்றிடத்திற்கு ஒரு மேலதிக வாக்குகளால் A.A.M.பசீர் அவர்கள் தெரிவு.

இன்று (26-06-2018) கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க உப தலைவராக கடமையாற்றி தற்போதைய கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் வெற்றிடத்திற்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்வதற்கான மகா சங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் தற்போதைய கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் M.பாஹிம் அவர்கள் சார்பாக இலக்கம் ஒன்றில் A.A.M.பசீர் அவர்களும்,முன்னால் கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் M.சலாஹூதீன் அவர்கள் சார்பாக இலக்கம் இரண்டில் A.M.சமீம் அவர்களும் போட்டியிட்டனர்,இந்த வாக்களிப்பில் கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு மகா சங்க உறுப்பினர்கள் 54 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,இரு குழுக்களுக்கும் கடுமையான போட்டி நிலவியதை அவதானிக்க முடிந்தது,இறுதியில் A.M.பசீர் அவர்களுக்கு 26 வாக்குகளும்,A.M.சமீம் அவர்களுக்கு 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன,இதில் செல்லுபடியாகாத மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன ஆகவே ஒரு மேலதிக வாக்குகளால் தற்போதைய தலைவர் P.M.M.பாஹிம் அவர்களின் அணியைச்சேர்ந்த A.A.M.பசீர் அவர்கள் வெற்றி பெற்றார்.


செல்லுபடியற்ற வாக்குகளினால் தான் தோல்வி அடைந்ததாக A.M.சமீம் அவர்களின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டதையும் அவதானிக்க முடிந்தது.

-Rizvi Hussain-










Post a Comment

0 Comments