கல்பிட்டியில் பல பொது விடயங்களை அல்லாஹ்வின் ஏற்பாட்டில் மக்களின் உதவியுடன் சிறப்பான முறையில் நடைமுறை படுத்தி வரும் கல்பிட்டி பெரிய பள்ளி நிர்வாகம் மேலும் ஒரு முக்கியமான உதவியை உங்களிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்,
கல்பிட்டி பெரிய பள்ளியில் காணப்படும் ஜெனரேட்டர் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது,இது பல முறை பல ஆயிரம் ரூபாய்கள் செலவீனம் செய்தும் ,குறுகிய காலத்திற்குல் மீண்டும் பழுதடைந்து உள்ளதால்,இதை மீண்டும் திருத்துவது வீண்செலவு என்று கூறப்பட்டுள்ளதால்,
புதிய ஜெனரேட்டர் ஒன்றை வாங்குவதற்கு நிர்வாகத்திற்கு தேவை ஏற்பட்டுள்ளது இதனை வாங்குவதற்கு நிர்வாகம் முயற்சி செய்வதினால் உங்களுடைய மேலான உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இதற்கு சுமார் ஏழு இலட்சம் ரூபாய் உதவி தேவைப்படுவதால் உங்கள் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்,
கல்பிட்டியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதனாலும் ரமழான் மாதம் ஆரம்பமாகவும் உள்ளதினாலும் அவசரமாக இதனை வாங்க வேண்டியுள்ளது ஆகவே அல்லாஹ்வின் மாளிகைக்கான இந்த உதவியை உங்களால் முடிந்த அளவு செய்து அவசியத் தேவையான ஜெனரேட்டரை வாங்குவதற்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கல்பிட்டி பெரிய பள்ளி நிர்வாகத்தினர் உங்களை கேட்டு கொள்கின்றனர்.
அல்லாஹ் மேலும் மேலும் உங்கள் தொழில்களில் பரக்கத்தை பொழிவானாக
ஆமீன்
0 Comments