Fabulous இளைஞர் கழகம் கடந்த ஆண்டு க.பொ.த சா/த மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாடங்களுக்கான கருத்தரங்களை இருபது பாடசாலைகளில் ஒழுங்கு செய்திருந்தது.
வெற்றி என்பது ஒற்றை நாளில் பெற்றுவிடுவதல்ல. தொடர்ச்சியான முயற்சியின் விளைவுக்கனியே தோல்வியும் வெற்றியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டது எமது இளைஞர் கழகம்.
அந்தவகையில் பாடசாலை, மாலை வகுப்புகள், மாணவர்களின் தொடர்முயற்சி, அனைத்திலும் மேலாக இறைவன் சித்தம் என அத்தனையும் இணைந்தே இறுதிவிளைவான பெறுபேறு என உறுதியாக நம்புகிறோம்.
ஒருநாள் கருத்தரங்கில் ஒட்டுமொத்தமாக ஒன்றையும் மாற்றிவிட முடியாது எனினும் ஓரளவு சிறு அதிர்வை ஏற்படுத்த முடியும்.
இம்முறை விஞ்ஞான பாடத்தில் 8 mcq உம் 1 structure உம் எம்மால் வழங்கப்பட்ட வினாத்தாளில் இருந்த வினாகளை ஒத்திருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது.
பரீட்சை பெறுபேறுகள் வெளியானதை தொடர்ந்து எம்மை நினைவுகூர்ந்து அழைத்தும் குறுந்தகவல் ஊடாகவும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்த அனைவருக்கும் பணிவுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறொம்.
குறிப்பாக எம்மை மனதாற வாழ்த்தியும் ஊக்குவிப்பும் தந்த கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்
மேலும் எம்மை நெகிழவைத்த கற்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபரின் வாழ்த்துக்களையும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
உங்கள் அனைவரையும் விடவும் வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்களான எம்மை மனமுவந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் கோடி
Efforts Never Die
0 Comments