Subscribe Us

header ads

சுமார் 230 ஆண்டு வரலாற்றை கொண்ட கல்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் சாதனை.



இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 20 கல்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களில் 12 மாணவர்கள் இம்முறை உயர் தரத்தில் கல்வி பயில தகுதி பெற்றுள்ளனர்,இம்முறையே அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் மகிழ்சியுடன் தெரிவித்தார்,இதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்ட ஆசிரியர்கள்,அதேபோல கிழமைகளில் ஐந்து நாட்களும் பகுதி நேர வகுப்புகளை நடாத்திய சகோதரி அதேபோல விஷேட விஞ்ஞான,கணித பாட கருத்தரங்கை நடாத்திய புத்தளம் இளைஞர் கழகமான Fabulous Youth Club இளைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்,அதேபோல பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார், இருந்த போதிலும் இங்கு உயர் தரம் கற்பிக்க அனுதி இல்லாததினால் இதுவரை காலமும் அருகிலுள்ள பெரிய பாடசாலைக்கே இந்த பாடசாலையில் சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் சென்றனர் இவர்கள்,கத்தோலிக்க சூழலில் கல்வி பயின்ற கத்தோலிக்க சமய மாணவர்கள் என்ற வகையிலும் அவர்களுக்கு அங்கு காணப்படும் புதிய சூழல் ,ஏனைய பொருளாதார காரணங்கள் காரணமாக தமது படிப்பை இடை நடுவே விட்டு விட்டு தனது தந்தையின் தொழிலான கடற்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்,

அவ்வாறு இடை நடுவே விட்ட மாணவர்களிடம் வினவியபோது Rc பாடசாலையிலே உயர் தரம் படிக்க முடிவுமாக இருந்திருந்தால் நாங்கள் உயர் தர கல்வியை முடித்திருப்பேன் என்றனர்,

ஆகவே இவ்வரிய குடும்பத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு கல்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு உயர் தர கல்வியை தொடர(உயர் தர வகுப்புகளை ஆரம்பிக்க) அனுமதி கிடைக்க வேண்டும்,இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

-Rizvi Hussain

Post a Comment

0 Comments