அஸ்ஸலாமு அலைக்கும் எனதருமை உறவுகளே....
எதிர் வரும் மாதம் ஏப்ரல் மாதம்...
நுவரெலியாவில் வசந்த காலம்....
நாம் எல்லோரும் இல்லாவிட்டாலும் சிலர் அந்த வசந்தகாலத்தை அனுபவிக்க ஆசைப்படுவீர்கள். தமது பிள்ளைகளை அழைத்துச் சென்று காண்பிக்க ஆசைப்படுவீர்கள்.
வருடத்தில் ஒரு முறையாவது குடும்பமாய் சென்று வர ஆசைப்படுவீர்கள்.
சந்தோஷம்....
தப்பில்லை...
தடுக்கவும் இல்லை...
ஆனால்,
அதனை இந்த வருடம் தவிர்த்து அடுத்த வருடம் சென்று வந்தால் என்ன???
நாம் அனைவரும் இந்த மாதத்திற்கு இந்த இந்த செலவுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்திருப்போம் அல்லவா???
அதில் இந்த வருடம் சுற்றுலாச் செல்லவென, இயற்கையை ரசிக்கவென குறைந்தது 20000 ஆயிரம் ரூபாய்களையாவது ஒதுக்கி வைத்திருப்பீர்கள்???
அதில் ஒரு சிரு தொகையை விரும்பியவர்கள் முழுத்தொகையை,
தற்போது பேரினவாதிகளால் எம் சமூகம் கண்டி மாநகரில் குறிப்பாக திகன, தெல் தெனிய, அம்பீதன்னை, கடுகஸ்தோட்டை என இன்னும் பல பிரதேசங்களில் தமது சொத்துக்களை இழந்து, தொழில் வசதிகளை இழந்து, ஏன் வீடு வாசல்களை கூட இழந்து தவித்து நிற்கின்றனர். ஏன் பிள்ளைகள் கூட கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாமல் தவிக்கின்றர்.
ஆகவே எம் சமூகத்திற்காக பலர் பல தியாகங்களை செய்ய முன் வந்திருக்கின்ற போது, நீங்கள் உங்களது இந்த சுற்றுலாவை இந்த வருடம் மட்டும் தியாகம் செய்து நான் மேலே குறிப்பிட்டதைப் போன்று நீங்கள் சுற்றுலாச் செல்லவென ஒதுக்கி வைத்திருக்கும் நிதியில் ஒரு சிரு தொகையை வழங்கி எம் மக்களுக்கு, எம் சமூகத்திற்கு முன் கூட்டியே உதவி செய்யலாமே???
குறைந்தது தமது வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கும் எம் மக்களின் ஒரு வரையாவது அவர்களின் வீடுகளில் குடியேர நாம் உதவிடலாமே????
இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் இத்தியாகத்தை செய்து அடுத்த வருடம் நாம் சுற்றுலாச் செல்லும் போது அவர்கள் அவர்களின் வீடுகளில் சந்தோஷமாய் வாழ்வதையும், தமது கடைகளை சீர் செய்து தமது தொழில்களை செய்வதையும் பார்த்துக் கொண்டே நாம் எமது பயணத்தை சந்தோசமாய் சென்று வரலாம்...
இதற்காக நான் உங்கள் சுதந்திரத்தில் குறுக்கிடுகின்றேன் என என் மீது கோபம் கொள்ளாதீர்கள்....
நானும் உங்களைப் போன்றே வருடம் வருடம் சுற்றுலாச் செல்பவன்தான்......
இப்படிக்கு
புத்தளத்திலிருந்து
உங்களில் ஒருவன் (sakeer)
0 Comments