Subscribe Us

header ads

மனோ கனேஷனை கடுமையாக கடிந்துகொண்டது சரியா?

நேற்று டைம்லைன் முழுவதும் ஏ மனோ கனேஷனே! என்று கவிதைகளால் நிரம்பி வழிந்திருந்தது. இதே மனோ கனேஷன் தான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முதல் கிந்தோட்ட பிரச்சினையில் தைரியமாக குரல்கொடுத்தபோது, மனோ போன்ற முதுகெலும்புள்ள அரசியல்வாதிகள் தான் முஸ்லிம் சமூகச்திற்கு வேண்டும் என்றும் நமது மனோ என்றும் பலரும் பதிவிட்டிருந்தார்கள்.
மனோ கனேஷனை ஏன் அவ்வளவு கீழ்த்தரமாக கடிந்துகொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் அராபிய நாட்டு கலாச்சாரங்களை இலங்கையில் புகுத்த முனைகிறார்கள் என்று சொன்னபோது முஸ்லிம்களுக்கு கடும்கோபம் வந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு பதிவுகள் போட்டு திட்டித்தீர்த்தார்கள்.
ஆனால் அதே நேற்று பாராளுமன்றத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க 'நாட்டில் உள்ள சிங்கள அடிப்படைவாதத்தை கண்டிக்க சிங்களவர்கள் பலர் இருக்கின்றார்கள். தமிழ் அடிப்படைவாதத்தை கண்டிக்க தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் நிலவும் முஸ்லிம் அடிப்படைவாத்தை கண்டிக்க முஸ்லிம்கள் யாரும் இல்லை' எனவும் 'இந்த இனக்கலவரம் இவ்வாறு மோசமாக பரவியதென்றால் சிங்கள தரப்பின் மீது ஒட்டுமொத்த பழியையும் சுமத்த முடியாது. மாறாக முஸ்லிம் தரப்பில் உள்ள பிழைகளும் இதற்கு பிரதான காரணம்' என்றும் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது முஸ்லிம்கள் எங்கே போனார்கள்?
இதே பிமல் ரத்னாயக்க தான் நேற்று விகாரமகாதேவி பூங்காவனத்தில் நடைபெற்ற ஜே.வி.பியின் இனவாதத்துக்கெதிரான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கடைசி பொதுமகன் அங்கிருந்து கிளம்பும் வரை நின்றவர். அதே போலதான் இனி என்ன சொன்னாலும் இன்னொரு இனவாத சம்பவம் நடந்தாலும் அரசாங்கத்தை தட்டிக்கேட்கப்போவது மனோ கனேஷன் தான்.
இனவாதத்திற்கு எதிரான குரல்களை நாம் இனிவரும் காலங்களில் ஒரு அணிக்கு கொண்டுவரும் வேளையை தான் கடுமையாக முன்னெடுக்க வேண்டும். அதன்போது இவ்வாறு மனோ, பிமல் போன்றவர்கள் கருத்துக்களில் விடும் தவறுகளை முஸ்லிம் தரப்பிலிருந்து நாங்கள் தான் அதை பக்குவமாக சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர திட்டித்தீர்ப்பது மிகவும் பிழையான செயற்பாடு.
இலங்கையில் தற்போதைய தேவை இனவாதத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான ஒரு பலமான அணியினை உருவாக்குவதே என்பதையும் நாம் மனதில் வைத்துக்கொண்டு செயற்படுவோம்..

-Reenum Maqra-

Post a Comment

0 Comments