Subscribe Us

header ads

ஒரு மருத்துவரின் உணர்வு. தமிழில் : ஸப்வான் பஷீர்.

நன்றி : Dr.Halith mohamed buhari 


நான் 2005 ஆம் ஆண்டு மருத்துவப்பீடத்துக்கு தெரிவுசெய்யப்படுகின்றேன். 2012 வரை இரவு பகலாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.ஏழு வருடங்கள் கடும் தியாகத்துக்கு மத்தியில் கல்வி கற்றேன்.


பின்னர் 2013 மார்ச் முதல் 2014 வரை intern Medical officer ஆக வேலை செய்தேன்.நான் வாழ்வில் சந்தித்த மிக கடினமான காலமாக இந்த காலப்பகுதியைக் கருதுகின்றேன்.



அதன்பின்னர் MO வாக வாழைச்சேனை வைத்தியசாலையில் இரண்டு வருடங்களாக கடமையாற்றினேன்.



10 நாட்கள் (24 x 10 = மணித்தியாலயங்கள் ) என்ற அடிப்படையில் வேலை செய்ய வேண்டும் அதேபோல் ஒரு அரசமருத்துவ அதிகாரியாக  செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும்.



6 - 8 வெளிநோயளர்பிரிவில் கடமை.ஒரு அமர்விற்கு 4 மணித்தியாலம் கட்டாயம் கடமையாற்றவேண்டியதோடு ஒரு அமர்வில்  குறைந்தது 250 நோயாளிகளையேனும்  பார்க்க வேண்டும்.



அத்தோடு எனது மனைவியின் துனையோடு ஒரு தனியார் கிளினிக்கும் நடத்தி வருகின்றேன்  அங்கே மாலை 4 மணி முதல் அரவு 10 மணிவரை வேலை செய்ய வேண்டும். 



இரண்டரை வருடங்களாக 365 நாளும் இப்படித்தான் உழைத்துக் கொண்டு இருக்கின்றேன். 



எனது குடும்பத்துக்கு ஒரு நல்ல வீடு வாங்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.
அதற்கு கடந்த 13 வருடங்களாக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன்.



இன்றுவரை என்னால் ஒரு கார் மட்டுமே வாங்க முடிந்துள்ளது ஒரு வீடு வாங்க பணம் சேர்ப்பதற்காக இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கின்றேன்.



சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது என்னைப்போல எல்லோருக்கும் ஒரு கடினமான காரியம்தான்.



இப்படியான ஒரு கனவு இல்லத்தை காரணமே இல்லாமல் யாராவது எரித்தால் எமது உணர்வுகள் எப்படி இருக்கும் என்று சிந்திக்கின்றேன்.



வீடு என்பது வெறும் சீமெந்தாலும் இலத்திரனியல் சாதணங்களாளும் நிறம்பியிருக்கும் ஒரு கட்டிடம்  அல்ல.



அதில் ஒரு மனிதனின் இரத்தமும் வியர்வையும் உணர்வுகளும் கலந்து இருக்கின்றது.



ஒரு குடும்பத்தின் அன்பும் நம்பிக்கையும் ஒரு வீட்டில்தான் தங்கியிருக்கின்றது.

Post a Comment

0 Comments