இந்நாட்களில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களால் கண்டி மாவட்டமெங்கும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தெல்தெனிய, திகன பிரதேசத்தில் இப்பிரச்சினை ஆரம்பித்தமையாலும், ஊடகங்களில் அதுவே அதிகம் பேசப்பட்டமையாலும் "அங்குள்ள முஸ்லிம்கள் மட்டுமே" பாதிக்கப் பட்டிருப்பது போன்ற ஒரு விம்பம் உருவாகியுள்ளது.
ஆனால், உண்மையில் தெல்தெனிய, திகன முஸ்லிம்களைப் போன்றே ஏனைய பகுதிகளான...
பலகொல்ல, கெங்கல்ல, கடுகஸ்தோட்டை, அகுறனை, வத்தேகெதர, வத்தேகமை, எண்டருதென்னை, ஹேதெனிய, தென்னெகும்புர போன்ற இன்னும் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் பரவலாக பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிதியுதவிகள் வழங்கும்போதும், நேரடியாக களத்தில் இறங்கி உதவிகள் செய்யும்போதும் அனைத்து பிரதேச மக்களையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். திகன, தெல்தெனிய போன்ற பிரபலமான பகுதியை மட்டும் எமது உதவிகள் சென்றடையாமல், அனைத்து மக்களையும் உள்ளடக்கும் விதத்தில் அவை கட்டமைக்கப்படல் வேண்டும்.
மேலும், தனிநபர்கள் நிதி சேகரிக்கத் தொடங்கினால் ஆட்டைகள் இடம்பெறலாம் என்பதால், நிதிச் சேகரிப்பினை அந்தந்த பகுதியின் பள்ளிவாசல்கள் பொறுப்பேற்றல் வேண்டும்.
ஏற்பாட்டாளர்கள் இதுகுறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜஸாக்கள்ளாஹ் க்ஹைர்.
______
இன்ஷாஃப் - மடவளை.
0 Comments