Subscribe Us

header ads

பலாக்காய் வெட்ட கத்தி கொடுக்காமையால் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை (இலங்கையில் சம்பவம்)


மாவனெல்லை பிரதேசத்தில்  இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகல்ல மாவனெல்ல பகுதியை சேர்ந்த 58 வயதான தல்கமுவலாகே நெவில் செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த பலா மரத்தில் பறித்த பலாக்காய் ஒன்றை வெட்டுவதற்கு பெரிய தந்தை மற்றும் அவரது மகனிடம் கத்தியை கேட்டு அதனை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதேவேளை, கொலை செய்த நபர் அதே முகவரியை சேர்ந்த 45 வயதனா மெலிசன் விஜேகுமார என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது வீட்டுக்கு எதிரில் இருக்கும் பலா மரத்தில் பலாக்காய் ஒன்றை பரிந்துள்ளதுடன், அதனை வெட்டுவதற்கு உயிரிழந்தவர் மற்றும் அவரது தந்தையிடம் கத்தியை கேட்டுள்ளார். கத்தியை கொடுக்காத காரணத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments