Subscribe Us

header ads

சவுதி இளவரசரின் வருகைக்கு தடை விதிக்ககோரி இங்கிலாந்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்து


சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பிரித்தானியாவுக்கு வருகை தர உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறைப் பயணமாக வருகின்ற மார்ச் 7-ஆம் திகதி பிரித்தானியாவுக்கு வருகை புரிய உள்ளதாக பிரதமர் தெரசா மேயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீவிரவாதம், ஏமனில் நடைபெற்று வரும் மோதல் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இளவரசரின் வருகைக்கு பிரித்தானியாவில் சில அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, இளவரசரின் வருகைக்கு தடை விதிக்ககோரி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு ஒன்று பிரதமர் அலுவலகம் வந்தடைந்துள்ளதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments