Subscribe Us

முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுது முடியும் வரையில் பாதுகாப்பு வழங்கிய பிக்குமார்கள்

முஸ்லிம்கள் இன்று  ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றும் வகையில் பௌத்த தேரர்கள் பல பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயலில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியுள்ளனர்.
கண்டியில் இடம்பெற்ற கலவர நிலைமையினால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழ்நிலையில் இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது.
அவிசாவலை ஜும்ஆ மஸ்ஜிதிலும், வெலிகம, ரத்மலான ஆகிய பிரதேசங்களிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் அவ்வப் பிரதேசங்களிலுள்ள விகாரைகளின் பிக்குமார்கள் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாட்டை வழங்கியுள்ளனர்.
தமக்குப் பாதுகாப்பு வழங்க வந்த பௌத்த பிக்குகளை சிறந்த முறையில் வரவேற்ற முஸ்லிம்கள், தமக்கு வழங்கிய உதவிக்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். 




-

Post a Comment

0 Comments