நடைபெற்ற கல்பிட்டி கோட்டமட்ட பாடசாலைக்கு இடையிலான 20 வயதிற்கு கீழ் மாணவர்களுக்கான விறுவிறுப்பாக நடைபெற்ற உதைப்பந்தாட்ட இறுதி போட்டியில் நுரைச்சோலை பாடசாலை அணியை பெனால்டி உதை 4 /3 என்ற அடிப்படையில் அல்-அக்ஸா தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்று வளைய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது,
ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் அல்-அக்ஸா தேசிய பாடசாலை அணிகளான 16 வயதிற்கு கீழ் உதைப்பந்தாட்ட அணி,18 வயதிற்கு கீழ் உதைப்பந்தாட்ட ஆகிய அணிகள் வெற்றி பெற்று வளைய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் கலந்து கொண்ட மூன்று பிரிவு அணிகளும் வெற்றி பெற்று வளைய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளது மூன்று பிரிவுகளிலும் திறமையாக விளையாடி பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்த மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-Rizvi Hussain-



0 Comments