Subscribe Us

header ads

அமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந்த நிலையில் அவசர தரையிறக்கம்!


அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து ஹவாய் தீவின் ஹோனோலூலூ சென்று கொண்டிருந்த போயிங் 777 ரக விமான எஞ்சினின் வெளிப்புற மேல்மூடி பறந்து கொண்டிருந்தபோதே கழன்று எங்கோ விழுந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த எஞ்சின் பகுதியிலிருந்து அதிர்வுகள் ஏற்பட்டன.

எனினும், விமானிகளின் முயற்சி மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து வழங்கப்பட்ட பாதுகாப்பு கட்டளைகளின்படி விமானத்தை செலுத்தி வெற்றிகரமாக ஹோனோலூலூ விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமான நிலையத்தில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போதும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பயணிகள் அனைவரும் வழமைபோல் இறங்கிச் சென்றனர், அவசரகால வழிகள் பயன்படுத்தப்படவில்லை.

Sources: AP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments