இங்கிலாந்தில் டெர்பிஷையர் எனுமிடத்தில் கோர்ட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த குற்றவாளி பெண் ஒருவர் போலீஸாரின் கண்ணில் பட்டுவிட, தப்பிக்க நினைத்தவர் அடுத்து செய்த அதிபுத்திசாலித்தனமான செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது.
போலீஸாரிடமிருந்து தப்பிக்க வழிதேடிய அந்தப்பெண்ணுக்கு அழுக்குத் துணிகளை சேர்த்து வைக்கப் பயன்படும் ஒரு பிளாஸ்டிக் கூடை ஒன்று கிடைக்கவே எடுத்து தலையில் 'கவுத்திக் கொண்டார்' என்றாலும் அவரது உடம்பும் கால்களும் தெரிய, இந்த அரிய நகைச்சுவை நிகழ்வை படமெடுத்துப் பரப்பிய போலீஸார் பத்திரமாக அந்தப் பெண்ணை பிடித்துச் சென்றனர்.
Source: Emirates 247 / Metro
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments