1. White Dress
எல்லோரும் சமம். ஒரு சீருடையின் கீழ், சமாதனத்தின் நிறமான வெள்ளை உடையுடன் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.
2. Declare
ஒரு கட்டத்தில் வாழ்வில் சம்பாதித்ததை அனுபவிப்பதற்கு கொஞ்ச நேரம் தான் கிடைக்கும். அப்போது போதுமென்றெண்ணி நிறுத்துவது தான் உண்மையான வெற்றி.
3. Lunch and Tea Break
எவ்வளவு தலைபோகும் வேலை இருந்தாலும் சரியான நேரத்திற்கு அத்தனையையும் நிறுத்திவிட்டு சாப்பிட வேண்டும்.
4. Follow On
நம்மைவிட பலம் குறைந்த எளியவர்கள் தவறிழைக்கும்போது போட்டி போடாமல் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதனால் நமக்கு எந்த குறையும் ஏற்படப்போவதில்லை.
5. Lead and Trail
வாழ்க்கையின் முற்பாதியில் சேர்த்து வைத்த நன்மையும் தீமையும் நிச்சயம் பிற்பாதியில் உதவும்.
6. Bad Light
நீங்கள் எவ்வளவு தான் போராடியபோதும் இயற்கை ஒத்துழைக்காதவரை உங்களால் சாதிக்க முடியாது.
7. Limited Review
ஒருவர் மேல் சில தடவைகள் தான் குற்றம் சுமத்தலாம். அதை நிரூபிக்கத்தவறும் பட்சத்தில் குற்றம் சொல்லும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
8. Draw
நீங்கள் எவ்வளவு தான் திறமையானவராக இருந்தாலும் நேரத்திற்குள் முடிக்கப்படாத எந்த வேலையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.
9. New Ball Taken
ஒரு கட்டத்தில் உங்கள் உறவுகள் பிரிந்து விலகும். அப்போது புதிய உறவுகள் வந்து சேரும். பேரக்குழந்தைகள் போல மீண்டும் எண்பதுகளின் பிறகு புதிய உறவுகள் பிறக்கும்.
10. Night Watchman
நம்மை சார்ந்தவர்களுக்காக முக்கியமான நிமிடங்களில் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கிரிக்கட் வெறும் விளையாட்டல்ல, அது நம்மில் ஏற்படுத்தவல்ல மாற்றங்கள் ஏராளம். Always proud to be a Cricketoholic.
-Rimaz Ahamed-
0 Comments