Subscribe Us

header ads

போதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை - பா.உ நாமல் ராஜபக்ஸ

பாரிய மதுபான உற்பத்தி நிலையத்தையும்பியருக்கு வரி குறைப்பையும்பியரைசாதாரண கடைகளில் விற்குமளவு ஏற்பாடுகளை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிப்பாலசிறிசேனவுக்குபோதை ஒழித்ததாக கூறி சர்வதேச விருது கிடைப்பதை போன்றநகைச்சுவை வேறேதுமில்லையென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற நாமல் ராஜபக்ஸதெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருளுக்கு எதிரான அரச சார்பற்ற அமைப்பின் சர்வதேச சம்மேளத்தினால்இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போதைபொருள் பாவனையை ஒழிக்கமுன்னெடுத்த முயற்சிக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளதுஇந்த செய்தியை போன்றஒரு நகைச்சுவையைநான் வேறு எங்கும் கேள்வியுற்றதில்லை.

இலங்கையில் கல்குடா பிரதேசத்தில் மிக பிரமாண்டமான ஒரு மதுபான உற்பத்திதொழிற்சாலை அமைக்கப்பெற்று வருகிறதுஇந்த மதுபான தொழிற்சாலை மத்தியஅரசின் நேரடி அங்கீகாரம் பெற்றே அமைக்கப்படுகிறதுஇந்த மதுபான தொழிற்சாலைநிறுவப்படுவதை எதிர்த்து அந்த மக்கள் குரல் கொடுக்கின்ற போதும்அது இவ்வரசின்காதுகளில் விழுவதாக இல்லை.

இம்முறை கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பியருக்கான வரியை குறைத்து,இவ்வரசு பியர் அருந்துவதை ஊக்குவித்துள்ளதுஅது மாத்திரமன்றி சாதாரண கடைகளில்பியர் விற்பனை செய்யும் திட்டம் சில காலங்கள் முன்பு முன்வைக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது

இப்படியான ஒரு நாட்டின் அரச தலைவருக்குஇவ் விருது எந்த வகையில்பொருத்தமாகும்
உள்ரங்கத்தை ஆராயாது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில வெளிரங்க பிரச்சாரத்தைபார்த்து இவ்விருதை வழங்கினார்களோ தெரியவில்லைஇவர்களின் சொல்லும் செயலும்முற்றிலும் வேறுபட்டவை தானே!

நாம் ஆட்சியை கைப்பற்றிய போது போதைப் பொருள் பாவனையாளர்களும்பாதளஉலகத்தினரும் மலிந்து காணப்பட்டனர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் இரவுநேரங்களில் மக்கள் பிரயாணம் செய்வதற்கு அஞ்சினர்எமது ஆட்சியின் இறுதிகாலப்பகுதியில் இவர்கள் இருவரினதும் முகவரிகளினையே இல்லாமல் ஆக்கிஇருந்தோம்இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் நாட்டுக்குள் முன்னர் போன்றுமலிந்துவிட்டனர்இதனை கொழும்பு போன்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் சிறிதும்அச்சமின்றி ஏற்றுக்கொள்வர்.

Post a Comment

0 Comments