Subscribe Us

header ads

முஸ்லீம் காங்கிரசின் தேர்தல் பரப்புரையும் திருகு தாளங்களும்


தேர்தல் பிரச்சாரங்கள் கடுமையாக சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவாளர்களால் முகநூலில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் ஏனைய கட்சி ஆதரவாளர்களை அவர்களின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது, அதற்கு காரணம் முஸ்லீம் காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களில் காணப்படும் மக்களின் எண்ணிக்கை.
இந்த மக்கள் அனைவரும் உண்மையில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவாளர்கள்தானா, கூட்டம் நடக்கின்ற ஊரில் வசிப்பவர்கள்தானா, என்று தேடினால் விடை பூஜ்ஜியம்தான்.
ஒரு காலத்தில் கிராமங்களில் செங்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட கட்சிக்கு இப்போது எங்கு சென்றாலும் எதிரப்புகளே காணப்படுகின்றது அதற்கு காரணங்கள் பல, சரிந்து வரும் கட்சிக்கான ஆதரவை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஒரு இமேஜை கட்டிக்காக்க வேண்டிய நிர்ப்பந்தம் கட்சித்தலைமைக்கும் அதன் விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்வோருக்கும் இருக்கின்றது.
ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு இருக்கும் வலுவான எதிர்ப்புகளையும் தாண்டி அந்த ஊரில் எங்கிருந்து அவர்கள் கூட்டத்திற்கான மக்களை பிடிக்க முடியும் இதனால்தான் முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் நூறு பேரை கூட்டங்களுக்கு அழைத்து வரவேண்டும் என்று மறைமுக கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்படும் ஆதரவாளர்களை கூட்டத்தில் கலக்க விடும்போது அது எண்ணிக்கையில் அதிகமாக காட்டும் அதை வைத்து ஒவ்வொரு பிரதேசத்திலும் தமக்கு ஆதரவு அதிகம் காணப்படுகின்றது என இலகுவாக பிரச்சாரம் செய்வதன் மூலம் ஏனைய ஊர் மக்களின் மனங்களில் முஸ்லீம் காங்கிரசிற்கு செல்வாக்கு இருக்கின்றது என்கின்ற ஒரு மாயையை ஏற்படுத்த முடியும் என்பது தலைமையின் கணக்கு.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்று பாலமுனையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடமத்திய மாகாணத்தில் இருந்து ஆதரவாளர்களை இரண்டு பஸ்களில் அள்ளிச்சென்றதை கூற முடியும்.
அதே போன்று கடந்தமாதம் புத்தளத்தில் நடைபெற்ற கூட்டமொன்றுக்கும் அனுராதபுர மாவட்டத்தில் இருந்து ஆதரவாளர்களை அள்ளிச்சென்றதையும் மறைக்க முடியாது, முஸ்லீம் காங்கிரசின் கூட்டம் ஒன்று நடைபெறும் போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அகில இலங்கை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவபடுத்துகின்றவர்களாக இருப்பார்களே தவிர, உள்ளூர் வாசிகளாக இருக்கமாட்டார்கள்.
நேற்றைய பாலமுனை கூட்டத்தில் வெளியூர் மக்களுடன் சேர்த்து அண்மைய ஊர்களிலிருந்து வந்து கலந்துகொண்டவர்களையும் முகநூல் வாயிலாக பலபேர் அடையாளப்படுத்தியிருந்தார்கள் அந்த புகைப்படங்களும் பரவலாக காணக்கிடைத்தது.
இவ்வாறு நாடு முழுவதுமிருந்து ஆதரவாளர்களை திரட்டி வந்து ஒரு ஊரில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதன் மூலம் கட்சி எந்தளவு வீழ்ச்சியையும் நெருக்கடியையும் சந்தித்திருக்கின்றது என்பதை தெளிவாக உணரலாம், இந்த தேர்தலில் தம்மை எப்படி நிலை நிறுத்தலாம் என சிந்தித்தன் விளைவுகளில் ஒன்றுதான் தேர்தல் அறிவிப்பின் பிற்பாடு முஸ்லிம் காங்கிரசினால் ஆரம்பித்து வைக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்.
இது போன்ற அபிவிருத்தி திட்டங்களை தேர்தல் அறிவிப்பின் பிற்பாடு எந்தவொரு கட்சியும் ஆரம்பித்துவைக்கவில்லை, இத்தனை வருடங்களும் காலம்கடத்திவிட்டு தேர்தல் அறிவித்த பிறகு பரவலாக அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கான தேவை முஸ்லீம் காங்கிரசிற்கு எதற்காக வந்தது ? இந்த திட்டங்களை காட்டியாவது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வோம் என்ற குறுகிய ஏமாற்றுப்புத்தியின் சாரம்சமே அது.
மக்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் இந்த அபிவிருத்தி திட்டமெல்லாம் உங்களை தெளிவாக ஏமாற்றுவதற்கே அன்றி வேறு எதற்குமில்லை, அபிவிருத்தி செய்யத்துணிந்த ஒரு கட்சி இத்தனை வருடங்கள் காத்திருக்கத்தேவையில்லை, அதை கடைசி நேரத்தில் அள்ளிக்கொண்டு ஓடி வரவும் தேவையில்லை.
சரிந்து விட்ட கட்சியின் நன்மதிப்பை மீள் புணருத்தானம் செய்ய எதிர்க்கட்சிகள் எங்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றன, என்று அவர்களின் மீது பாரத்தை போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வதை விட வேறு வழி கட்சிக்கு இப்போதைக்கு இல்லை.

-Razana Manaf-

Post a Comment

0 Comments