கல்பிட்டி பாடசாலைகளில் நடைபெற்ற தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பாடசாலைகளில் அரசியல் தலையீடு இருந்ததாகவும் சில அரசியல் வாதிகளுக்கு முன்னுரிமை வழங்கியதாகவும் சில சுயநலவாதிகள் அரசியல் வாதிகளான வேட்பாளர்களிடம் பொய்யான வதந்திகளை பரப்பி வேட்பாளகர்களிடத்தில் குழப்ப நிலையையும் அதிபர்கள் மேல் கோபத்தையும் ஊருக்குள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்ததாக எனக்கு அறியக்கிடைத்தது.நான் அணைத்து பாடசாலைகளில் நடந்து நிகழ்வுகளிலும் நேரடியாக பங்குபற்றியவன் என்ற வகையில் இவ்வாறான எந்த செயல்பாடுகளும் நடைபெற வில்லை என உறுதியாக தெரிவித்து கொள்வதோடு.இதற்கான ஆதரங்களும் என்னிடம் உள்ளது என்பதையும் தயவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சில அரசியல் வாதிகள் தனது பிள்ளைகள் சார்பாக கலந்து கொண்டார்கள் ஆனால் அவர்களும் ஏனைய பெற்றோர்கள் பேன்றே அதிபர்களால் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இவ்வாறான சந்தோகங்கள் தோன்றும் போது அவ்விடயங்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதனால் வீனான பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்,அந்த வகையில் இந்த விடயம் தனக்கும் அறிய கிடைத்தவுடன் கல்பிட்டியின் முக்கிய அரசியல் வாதி ஒருவர் அவருக்கு நெருக்கமான ஒருவர் ஊடாக என்னிடம் தொடர்பு கொண்டு பாடசாலையில் நடைபெற்ற சகல விசயங்களையும் கேட்டு தெளிவு பெற்றதின் மூலம் சின்ன விடயங்களாக நினைத்து சுயநலவாதிகளால் பரப்பப்படும் வதந்தியால் ஊருக்குள்ஏற்படவிருந்த பாரிய பிரச்சினை ஒன்று தவிர்க்கப்பட்டது.
இதேபோல ஏனைய அரசியல்வாதிகளும் தமக்கு கிடைக்கும் சந்தேகமான தகவல்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடர்ப்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்வதின் மூலம் ஊருக்குள் ஏற்படக்கூடிய அனாவசிய பிரச்சினைகளை தவிர்த்து கொள்வதுடன் சுயநலவாதிகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்,
எல்லா அரசியல்வாதிகளும் ஊர் நலனுக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ளீர்கள் ஒற்றுமையும் ஊரின் முக்கியமான நலன் அது வீணான வதந்திகள் மூலம் சீர்குலைந்து விடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
-Rizvi Hussain-
0 Comments