Subscribe Us

header ads

விழித்திடு கல்பிட்டியே! சிந்திக்கும் தருணத்தை இழந்து விடாதே.


அதிகரிக்கும் போதை பாவனைகளை தடுக்க முடியவில்லை,

சுகாதார சீர்கேடுகளையும்-டெங்கு போன்ற நோய் பரவளையும் தடுக்க முடியவில்லை,

அதிகரிக்கும் காடைத்தனத்தில் இருந்து எமது சந்ததிகளை காப்பாற்ற முடியவில்லை,

மழுங்கிப்போகும் பாடசாலை கல்வியும் சிகரம் முட்டும் பிரத்தியேக வகுப்புக்களும் ஏழை மாணவர்களின் வாழ்வை சிதைப்பதை தடுக்க முடியவில்லை,

சனத்தொகைக்கேட்ப மறுமலர்ச்சி காணாத எமது கல்வியின் வீழ்ச்சியைப்பற்றி திட்டமிட முடியவில்லை,

அரச சொத்துக்களை பாதுகாத்து எமது சந்ததிகளின் கைகளில் ஒப்படைக்கும் திட்டங்களை எம்மால் வகுக்க முடியவில்லை,

சலுகைகளுக்கு விலைபோய் உரிமைகளை பறி கொடுக்கும் எமது மக்களை தெளிவுபடுத்த முடியவில்லை.

.............................................................................................

இது அனைத்தும் ஏன்? எப்படி? யாரால் முடியும்?

மக்கள் சிந்திப்பது எப்போது? 

உங்களிடம் வரும் வேட்பாளர்களின் தகைமைகளையும் அவர்களின் சமூகப்பற்றையும்,சமூகத்தை வழி நடத்தும் அவர்களின் விவேகத்தையும் சற்று ஆராய்ந்து அல்லது சிந்தித்து பாருங்கள் எமது சமூகம் அதல பாதாளத்தை நோக்கி செல்வதை நீங்கள் உணர்வீர்கள். 

தங்களின் இலக்கை அடைவதற்காக மக்களை வளைத்துப்போடும், ஏமாற்றும் தந்திரங்களை மட்டும் அவர்களிடம் குறைவின்றி நிறைவாக இருப்பதை காணலாம்.

மக்களே சிந்தியுங்கள், சிந்திப்பதற்கான கால அவகாசம் இன்னும் உங்களுக்கு உள்ளன.

உங்களை சிந்திக்க வைக்க வேண்டும்,

சிந்திக்கும் மக்களாக நீங்கள் மாற வேண்டும்,

என்பதே எமது கொள்கை

-Jeezan A.-

Post a Comment

0 Comments