(16 /12/2017)காலை 8.00 மணி தொடக்கம் பி.ப.2.00 மணி வரை கல்பிட்டி பெறியபள்ளி மையவாடி சிரமதானப்பணி எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக முழுக்காணிப்பகுதியும் துப்புரவு செய்யப்பட்டு முடிவடைந்தது.
இச்சிரமதானபணிக்கு ட்ரெக்டரையும் மூன்று பணியாளர்களையும் தந்துதவிய கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு,மேலும் டிராக்டர் உதவி செய்த ரிபாய்,பாஜில் ஆகியோர்களுக்கும் பிரதேச சபையில் கடமையாற்றும் ஹப்னாஸ்,ரிஸ்வி ஆகியோர்களுக்கும்,ஊர் ஜமாத்தினர்களுக்கும்,சிறுவர்களுக்கும்,நலன் விரும்பிகளுக்கும் பெறியபள்ளி நிர்வாகத்தினர் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
இச்சிரமதானபணியில் வயோதிபர்களும்,சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது அவதானிக்க முடிந்ததோடு இளைஞர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments