27-12-2017 அன்று கல்பிட்டி பிரதேச சபையில் நடைபெற்ற புதிய உள்ளூராட்சி மன்றங்களை இஸ்தாபித்தல் சம்பந்தமான ஆணைக்குழு கலந்துகொண்ட அக்கரைப்பற்று பிரேத சபை ஒன்றை கல்பிட்டி பிரதேச சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்குவது சம்பந்தமான காரணிகளை வாய்மொழி மூலமாகவும் ,எழுத்து மூலமாகவும்,கண்டறியவும்,கேட்டறியவும்,சமூகம் தந்திருந்தனர்,இக்கூட்டத்திற்கு கல்பிட்டி பிரதேச அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்,
இந்நிகழ்வில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது உண்மையே அதாவது ஆணைக்குழுவினர் சமூகம் தந்தது அக்கரைபற்று என்ற புதிய பிரதேச சபையை உருவாக்குவதற்கான காரணிகளை கண்டறிவதற்காவே மாத்திரமே தவிர இதன் மூலம் கல்பிட்டி நகர சபை ஆகும் என்றோ, கல்பிட்டி நகர சபையையும் உருவாக்குவதற்கோ அல்ல என்றும்,நீங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பியுங்கள் தகுந்த காரணிகள் இருந்தால் நகர சபை ஆகலாம் அல்லது பிரதேச சபையாகவே செயல்படலாம் எனக்கூறப்பட்டதினாலேயேயும்,ACMC கல்பிட்டி அமைப்பாளர் எஹ்யா அவர்களும் இவ்வாணைக்குழு சமூமளித்துள்ளது அக்கரைப்பற்று பிரதேச சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை பெறவே என்று கூறியதும்,சர்ச்சை ஏற்படக்காரணமாக அமைந்தது ஏன் பிரேரணை சமர்ப்பிக்கும் போது,கல்பிட்டி பிரதேச அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள்,புத்தி ஜீவிகள் போன்றோறிடம் ஏன் ஆலோசனை பெறவில்லை,அதேபோல அக்கரைப்பற்று பிரதேச சபையாகும் போது கல்பிட்டி நகர சபை ஆக வேண்டும் என்ற பிரேரணையும் சேர்த்து சமர்ப்பிக்கவில்லை என்றும்,நாங்களும் ஏற்கனவே சமர்ப்பித்த கல்பிட்டி பிரதேசபை நகர சபையாக்குதல் என்ற முன்மொழிவை ஏற்றுக்கொண்டு நகரசபை ஆக்குவதற்கான காரணிகளை கண்டறிவதற்கும் ஏன் சமூகம் தரவில்லை என்றும்,அல்லது அக்கரைப்பற்று புதிய பிரேத சபையாக உருவாக்கப்பட்டால் கல்பிட்டி நகரசபை ஆகும் என்ற உத்தரவாதத்தை ஏன் தர முடியாது என்ற காரணங்களை வைத்தே சர்ச்சைகள் தோன்றின,ஏன் கல்பிட்டி மக்களின் இந்த கோறிக்கை நியாயமானது இல்லையா?தனது காரியம் முடிந்தால் சரி மற்றவர்கள் எப்படி போனாலும் சரி என்ற நோக்கில் இது நடைபெற்றுள்ளது என்று மக்கள் கூறியதை அவதானிக்க முடிந்தது.
-Rizvi Hussain-
-Rizvi Hussain-
0 Comments