அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வேற்றுகிரக வாசியினால் தான் கன்னித்தன்மையை இழந்ததுடன், வேற்று கிரகவாசியின் மூலம் பிள்ளைகளையும் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
டேவிட் ஹக்கின்ஸ் எனும் இவர், நியூயோர்க்கைச் சேர்ந்தவர். தற்போது இவருக்கு 74 வயதாகிறது. தனது 17 ஆவது வயதில் கிறசென்ட் எனும் வேற்று கிரகவாசியான பெண் மூலம் தான் கன்னித்தன்மையை இழந்ததாக டேவிட் ஹக்கின்ஸ் கூறுகிறார்.
பற்றைக்காடொன்றில் தான் நடந்துசென்றபோது, மரமொன்றின் அடியில் வேற்று கிரகவாசிப் பெண் காணப்பட்டதாகவும் தன்னுடன் அப்பெண் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் ஹக்கின்ஸ் கூறுகிறார்.
லவ் அன்ட் சோசர்ஸ் எனும் ஆவணப்படமொன்றிலும் மேற்படி விடயங்களை டேவிட் ஹக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஓவியரான டேவிட் ஹக்கின்ஸ், வேற்று கிரகவாசிப் பெண்ணுக்கும் தனக்கும் இடையிலான உறவை சித்திரிக்கும் வகையில் பல ஓவியங்களையும் வரைந்துள்ளார்.
கிறசன்டுடனான பாலியல் உறவின் மூலம் மனிதத்தன்மை மற்றும் வேற்றுகிரகவாசிகளின் கலப்புத் தன்மையான சுமார் 60 ஹைபிரிட் பிள்ளைகள் பிறந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இவருக்கு பூமியிலுள்ள பெண்ணொருவர் மூலம் பிறந்த மகன் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது வேற்று கிரக காதலி குறித்து டேவிட் ஹக்கின்ஸ் கூறுகையில், “அவர் சிறந்த உடலைக் கொண்டிருந்தார். மிக நீளமான கைவிரல் நகங்கள், பெரிய கண்களுமே வித்தியாசமாக இருந்தன. அவரின் முகம் வெளிறிய நிறத்தில் காணப்பட்டது” எனவும் டேவிட் ஹக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments