Subscribe Us

header ads

கற்பிட்டியில் "பல்லின சமூகங்களுக்கிடையில் முஸ்லிம்கள் " வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்வு.


மேற்படி நிகழ்வு நேற்று(16/12/2017)மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கல்பிட்டி பஸார் ஜூம்ஆ மஸ்ஜித்தில் அகில இலங்கை ஜம்இயத்தின் உலமாவின் ஏற்பாட்டில் ,கல்பிட்டி ஜம்இயத்துல் உலமா கிளை நடத்தியது.


இதில் முக்கிய நிகழ்வாக பல்லின மக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ வேண்டும்,தற்போதைய சூழ்நிலை,எதிர்கால முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக விரிவாகவும் விளக்கமாகவும் கண்டி மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவரும்,ஜம்இயத்தும் உலமா பிரச்சார குழு செயலாளருமான மெளலவி உமர்தீன் ரஹ்மானி அவர்கள் வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினார்கள்.இந்நிகழ்வில் அதிகமான ஜமாத்தினர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-





















Post a Comment

0 Comments