ஜெருசலேம் நகரை மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இந்த விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா.வில் இன்று பொது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
வாக்கெடுப்பில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் பெயர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படும் என ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறி உள்ளார். இது அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஜெருசலேம் தீர்மானத்தை அங்கீகரிப்பதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து செய்யப்படும் அமெரிக்க என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது ,
எங்களுக்கு எதிராக வாக்களிக்க பில்லியன் டாலர்கள் வாங்கபட்டு உள்ளது. எங்களுக்கு எதிராக வாக்களிக்கட்டும் நாங்கள் கவலைப்படவில்லை என கூறினார்.


0 Comments