Subscribe Us

header ads

யாழில் அம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய யாழ். மாணவர்கள் (பலருக்கு முன் உதாரணம்)

(மயூரன்)
யாழில் சாதா­ரண தரப் பரீட்சை எழுதும் மாண­வர்கள் இருவர் அம்­பி­யூலன்ஸ் வாக­னத்தில் பரீட்சை மண்­ட­பத்­திற்கு சென்று பரீட்சை எழு­தி­யுள்­ளனர்.
குப்­பிளான் மற்றும் வசா­விளான் பகு­தியை சேர்ந்த இரு மாண­வர்­களே இவ்­வாறு பரீட்சை எழு­தி­யுள்­ளனர். குறித்த மாண­வர்­களில் ஒருவர் காய்ச்­ச­லி­னாலும், மற்­றை­யவர் பாம்­புக்­க­டிக்கு இலக்­கான நிலை­யிலும் தெல்­லிப்­பளை வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இரு மாண­வர்­களும் நடை­பெறும் க.பொ.த. சாதா­ரணப் தரப் பரீட்­சையில் தோற்றும் மாண­வர்கள் என்­ப­தனால் வைத்­திய நிபுணர் மற்றும் தாதி­யர்கள் விசேட கவனம் செலுத்தி இருந்­தனர்.
மாண­வர்கள் இரு­வரும் பரீட்சை எழுதும் அள­வுக்கு உடல் தகு­தியை அடைந்­தி­ருந்த போதிலும் அவர்­களை இரு­நாட்­க­ளுக்கு மருத்­துவ கண்­கா­ணிப்பில் வைத்­தி­ருக்க வேண்­டிய தேவை இருந்­த­மையால் மாண­வர்கள் இரு­வரும் வைத்­திய சாலையில் தங்க வைக்­கப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.
மறுநாள் மாண­வர்கள் பரீட்சை எழுத செல்ல வேண்டி இருந்­த­மையால் மாண­வர்கள் இரு­வ­ரையும் நோயாளர் காவு வண்­டியில் பரீட்சை மண்­ட­பத்­துக்கு அனுப்பி , தாதி­யர்கள் இரு­வ­ரையும் துணைக்கு தெல்­லிப்­பளை வைத்­திய சாலை வைத்­திய நிபுணர் அனுப்பி வைத்­தி­ருந்தார்.
மாண­வர்கள் இரு­வரும் பரீட்சை எழுதும் வரையில், பரீட்சை மண்­ட­பத்­திற்கு வெளியே தாதி­யர்கள் காத்­தி­ருந்து மாண­வர்கள் பரீட்சை எழுதி முடிந்ததும் , மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கியமை குறிப்பி டத்தக்கது.

Post a Comment

0 Comments