ஊழல் குற்றங்களால் சவுதியின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதே இளவரசர் சல்மானின் நோக்கம் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கியில், பல்வேறு ஊழல் குற்றங்களின் கீழ் கைதாகியுள்ள பெரும் புள்ளிகள், தங்களின் 70 சதவிகித சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்ற செய்தி சவுதி ஊடகங்களில் வெளியானது.
கைது செய்யப்பட்ட இளவரசர்கள் சவுதி அரேபியாவிலுள் ரியாத்திலுள்ள ஆடம்பர ரிட்ஸ்- கார்ல்டன் ஹொட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இளவரசர்கள் உட்பட 200 பிரமுகர்கள் அங்கு உள்ளனர். இந்நிலையில் அந்த ஹொட்டலுக்கு செல்லும் வாய்ப்பு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு கிடைத்தது.
ஆனால், இளவரசர்களின் முகங்களை காட்டுவதற்கும், அவர்களின் உரையாடல்களை பதிவு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4 முதல் இந்த ஹொட்டல் சிறையாக செயல்பட்டு வருகிறது. தங்களின் விடுதலைக்காக கணிசமான பணத்தினை திருப்பிக்கொடுக்க 95 சதவீதம் பேர் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹொட்டல் அறையில் எத்தனை நாட்கள் இளவரசர்கள் இருந்தார்களோ, அதுவரை அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து சவுதி அரசிடம் கேள்விகள் எழும் என பிபிசி தெரிவித்துள்ளது.


0 Comments