Subscribe Us

அசாத் சாலியின் தஃவா ஞானசார தேரரிடம் எடுபடாமல் போனது ஏன் ?


கடந்த சில மாதங்களாக முஸ்லிம் அணியினர் சிலருக்கும் பொது பல சேனாகுழுவினருக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.இன்னும்பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறதுஇவர்களதுகலந்துரையாடல் மூலம் ஞானசார தேரர் தெளிவு பெற்று விட்டதாகவும் அவர் சிலவிடயங்களில் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுகிறார் அமைதியாகி விட்டார்என்றெல்லாம் கூறப்பட்டதுஇப்படி நடந்து கொண்டிருக்கும் போதே அவர் மியன்மார்சென்று ரோஹிங்ய முஸ்லிம்களை கொன்று குவித்த அசின் விராதுவை சந்தித்துவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிந்தோட்டை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் இளைஞர்களை முஸ்லிம்கள் கட்டுப்படுத்தவேண்டும்,இரத்த ஆறு ஓடும்,அதிகம் துள்ளும் றிஷாத் பதியுர்தீனுக்கு பருப்புகொடுப்போம்  போன்ற தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறார்.அவர் பிரச்சாரம்செய்ய சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது

இங்கு அசாத்சாலி அணியினர் ஞானசார தேரருக்கு வழங்கிய தஃவா பிரச்சாரம் ஞானசாரதேரரிடம் எடுபடவில்லை என்ற விடயம் தெளிவாகிறதுஅசாத்சாலி அணியினரோதங்களது பிரச்சாரத்தால் ஏதோ சாதித்துவிட்டோம் என்றெல்லாம் கூவித் திருந்தமையும்சிலர் தங்களைப் பற்றி கூறுவதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாதென பொது பல சேனாஅணியினரும் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கிந்தோட்டை விடயத்தில் அசாத்சாலியும் பொது பல சேனாவும் ஒரேநிலைப்பாட்டில் உள்ளனர்.இந்த சம்பவத்துக்கு பிரதான முஸ்லிம்கள் சிங்களஇளைஞனை தாக்கியது என்பதாகும்.அசாத்சாலியே இந்த பிழையை முஸ்லிம்கள் மீதுதூக்கிப் போடும் போது அதனை பொதுபல சேனா அணியினர் கூறுவதை பெரிதாக கூறமுடியாது.தௌஹீத் ஜமாத்தை எதிர்த்தல் போன்ற சில விடயங்களில் அசாத்சாலி பொதுபலசேனாவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.அஹமட் 
ஊடக செயலாளர் 
முஸ்லிம் முற்போக்கு முன்னனி 

Post a Comment

0 Comments