இலங்கையில் Acer ரக தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளரும், விநியோகத்தருமான மெட்ரோபொலிடன் டெலிகொம் சேர்விசஸ் (பிரைவேற்) லிமிடெட், புத்தம் புதிய Acer Liquid Z410 ஸ்மார்ட்ஃபோனை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது.
புதிய AcerLiquid Z410 என்பது சிறியளவிலமைந்த வினைத்திறன் வாய்ந்த கையடக்க தொலைபேசியாகும். இது LTE இணைப்பு, quad core processor, dual cameras மற்றும் நீண்ட காலம் இயங்கும் பற்றரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Liquid Z410 அறிமுகத்துடன் அனைவருக்குமான வேகம் மற்றும் வலுவை Acer ஏற்படுத்தியுள்ளது. அல்ட்ரா வினைத்திறன் வாய்ந்த 64-bit quad-core processor மற்றும் LTE இணைப்புகளை வேகமான இணைய வேகம், ஸ்ட்ரீமங் மற்றும் தரவிறக்கம் செய்வது போன்ற வசதிகளை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்ஃபோன் மூலமாக வேகமாக செயற்பாடுகளை கையாள்வது மற்றும் சகல வேளைகளிலும் தெளிவான அழைப்புகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது.
மெட்ரோபொலிடன் டெலிகொம் சேர்விசஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சஞ்சீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில், “Acer ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளுக்கு இலங்கையில் ஏக விநியோகத்தராக செயற்படும் மெட்ரோபொலிடன் நிறுவனத்தின் மூலமாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் உள்நாட்டு நுகர்வோர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Acer மற்றும் மெட்ரொபொலிடன் ஆகியன, வேறுபடும் இன்றைய நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய தெரிவுகளையும் தொழில்நுட்பங்களையும் வழங்கும் வகையில் தீர்வுகளை வழங்கி வருகின்றன” என்றார்.
புதிய தொழில்நுடபம், புத்தாக்கம் மற்றும் செயற்படும் தன்மை ஆகியவற்றை வழங்குவதன் மூலம், Acer இன் புத்தம் புதிய Liquid Z410 நுகர்வோரின் பரந்த தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. உயர் வேகமான இணைப்பு மற்றும் சிறந்த கமரா அனுபவம் ஆகியவற்றை நாடுவோருக்கு சகாயமான விலையில் இது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நபர் ஒருவரின் நாளாந்த தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட்ஃபோன் அமைந்துள்ளது என்பதை Acer அறிந்துள்ளது.
எனவே Liquid Z410 என்பது 8GB உள்ளக தரவு சேமிப்பு பகுதி, 5.5 மணி நேரங்கள் வரை இயங்கக்கூடிய பற்றரி, 400 மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து இயக்கத்திலிருக்கக்கூடிய ஸ்டான்ட்பை ஆகியன காணப்படுகின்றன. கமராவின் கீழ் பகுதியில் காணப்படும் AcerRAPIDTM™ பொத்தான் மூலமாக பாவனையாளர்களுக்கு பல்வேறு செயற்பாடுகளை ஒரு தொடுகையின் மூலமாக மேற்கொள்ள முடியும்.
எந்தவொரு கையினாலும் உபயோகிக்கக்கூடிய AcerRAPID™ என்பது வேகம், நெகிழ்ச்சித்தன்மை மற்றும் பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், Liquid Z410 என்பது Acer QuickTouch திறனையும் கொண்டுள்ளது. இதன் மூலமாக பாவனையாளர்களுக்கு விரைவாக தமது கையடக்க தொலைபேசிகளை ஒரு விரலின் மூலமாக மிகவும் எளிமையாக கையாளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லொக் செய்யப்பட்ட திரையில் Z வடிவில் சைகையை மேற்கொள்வதன் மூலமாக மியுசிக் ப்ளேயர் செயற்படுத்தப்படும். இடது பக்கம் அல்லது வலது பக்கம் சைகை செய்வதன் மூலமாக அடுத்த அல்லது முன்னைய பாடலை தெரிவு செய்யலாம்.
C வடிவான சைகை மூலமாக கமரா செயற்படுத்தப்படுவதுடன், V சைகை மூலமாக டயலர் செயற்படுத்தப்படுகிறது. AcerRAPID™ மற்றும் QuickTouch ஆகியவற்றின் மூலமாக Liquid Z410 க்கு வலுச்சேர்க்கப்பட்டு மிக வேகமாக செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது.
நினைவுகளை முன்னொரு போதுமில்லாத வகையில் இலகுவாக Acer Liquid Z410 கையடக்க தொலைபேசியில் படமெடுத்து பதிந்து வைத்திருக்க முடியும். இது IPS டிஸ்பிளே மற்றும் 2MP 80°wide-angle முன்புற கமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதன் மூலமாக செல்ஃபிக்கள் மிகவும் தெளிவாக பதிவாகும். பின்புற கமரா 5 MP Autofocus snapper மற்றும் LED Flash கொண்டுள்ளது. Liquid Z410 ஐ வடிவமைக்கும் போது Acer கவனம் செலுத்தியிருந்த பிரதான விடயங்களில் ஒன்றாக இது அமைந்திருந்தது.
மல்டிமீடியா அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், Acer Liquid Z410 இல் முன்புறத்தில் காணப்படும் DTS Studio SoundTM™ ஸ்பீக்கர்கள் அமைந்துள்ளன. இதன் மூலமாக நிபுணத்துவம் வாய்ந்த சினிமா திரை அனுபவம் கிடைக்கிறது.
Acer மூலமாக பிரபல்யம் வாய்ந்த QuickMode செயற்பாடு வழங்கப்படுவதுடன், வெவ்வேறு பாவனையாளர்களின் தேவைகளுக்கமைய இது அமைந்துள்ளது.
குறிப்பாக சிறுவர்கள் முதன் முதலில் ஸ்மார்ட்ஃபோன்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அல்லது வயது முதிர்ந்தவர்கள் பார்வையிடுவதற்காக பெரிய பிரகாசமான திரைகள் போன்றன இதில் அடங்கியுள்ளன.
Acer Liquid Z410 என்பது மெட்ரொபொலிடன் M-Center கள் மற்றும் நாடு முழுவதும் காணப்படும் விநியோகத்தர்களிடம் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விலை ரூ. 19,999/= என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0 Comments