(19/11/2017) அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஊர் நலன் விரும்பிகளால் கல்பிட்டி பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,மதத்தலைவர்கள்,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய முக்கியஸ்தர்கள்,பிரதேச சபை முக்கியஸ்தர்கள்,வைத்தியசாலை முக்கியஸ்தர்கள்,கிராம சேவகர்கள்,அதிபர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,புத்திஜீவிகள்,அரசியல்வாதிகள்,சங்கங்களின் தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது கல்பிட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதினால் ஒரு உயிர் போகும் வரைகாத்திருக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்றிலேயே கல்பிட்டி எமது ஊர் கல்பிட்டி மக்கள் எமது உரவுகள் என்ற ஒற்றுமையின் நிமிர்த்தம் இந்த நோயின் வீரியத்தை குறைப்பதற்காக ஏனைய ஊர்களில் நடைபெற்றதைப் போன்று ஊர் தழுவிய ஒரு நாள் சிரமதானம வேளைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டன.
இதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள்,செயல்படுத்தும் முறைகள் ,சிரமதானம் நடைபெறும் நாள் போன்றவை எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்பிட்டி பிரதேச சபையில் முக்கிய அரச அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
சாதி மதம் இயக்க அரசியல் வேறுபாட்டை மறந்து எமக்காகவும் ஊருக்காகவும் ஒன்று படுவோம் டெங்குவை கல்பிட்டியை விட்டு விரட்டுவோம்.
-Rizvi Hussain-
















0 Comments