Subscribe Us

header ads

சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT வரி அமல் !


வளைகுடா அரபு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த வாட்வரி (unified VAT tax) விதிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில்லரை பெட்ரோல் விற்பனையின் மீதும் 5% வாட்வரி வசூலிக்கப்படும் என சவுதியின் ஜகாத் மற்றும் வரி வசூலுக்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் அது தொடர்பான வர்த்தகம் ஆகியவைகளின் மீதான வாட்வரி பயண டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக வசூலிக்கப்படும்.

அதேவேளை வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சரக்குகள் மீது வாட்வரி விதிக்கப்படாது. மேலும் கூடுதல் பயணப் பொதிகள் (Excess Baggage), இருக்கை முன்பதிவு, பராமரிப்பு, வாகனத்தில் சர்வதேச தரத்திற்கு ஏற்ற பழுது பார்ப்புகள் மற்றும் மாற்றியமைத்தல்கள், சரக்கு பாதுகாத்தல்கள், துறைமுக கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள், கஸ்டம்ஸ் தீர்வைகள், சுங்க சேவை கட்டணங்கள், போக்குவரத்து தொடர்பான இதரவகைகள், விமான வழித்தட சேவைகள் மற்றும் விமான பணிக்குழு கட்டணங்கள் அனைத்தும் வாட்வரியிலிருந்து விலக்கு பெறுகின்றன.

மேலும் வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள், கார் விற்பனைகள், கார்களை கராஜ்களுக்கு விற்பது தொடர்பிலும் வாட்வரி கிடையாது. நெருங்கிய உறவினர்களுக்குள் விற்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கும் வாட்வரி வசூலிக்கப்படாது.

அதேபோல் வங்கிகள், கிரெடிட் கார்டுகள், பங்குகள், அடமானங்கள், நிதிசார் குத்தகைகள், ஆயுள் காப்பீடு, தனிப்பட்ட நிதி, வட்டி, முதலீட்டு நிதி போன்ற கட்டணமில்லா பணப்பரிவர்தனைகளின் மீதும் வாட்வரி இல்லை.

மேற்காணும் விலக்குகள் தவிர்த்து ஏனைய ஏனைய தயாரிப்புகள், விநியோகம் செய்யப்பட்டு, விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஒவ்வொரு பரிமாற்றத்தின் போது தனித்தனியாக வாட்வரி செலுத்த வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments